10வருஷம் ஆட்சியில இருந்தும் காரை ஒரு முறைகூட மாற்றலையா!.. டிசம்பர் 26 மறுபடியும் மறக்க முடியாத நாளா மாறிருச்சு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 92 வயதில் காலமானார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சமீப சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று (டிசம்பர் 26) இரவு மறைந்தார். இதனால் டிசம்பர் 26 மீண்டும் இந்தியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறியிருக்கின்றது. இதே நாளிலேயே கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவை சுனாமி தாக்கியது. இதில் தமிழ்நாடு, இலங்கை, சுமத்ரா தீவு உள்ளிட்டவை பேரழிவைச் சந்தித்தன.

இதனால், இப்போதும் பலருக்கு டிசம்பர் 26 ஆறா வடுவாக பலரின் மனதில் உள்ளது. இந்த நிலையிலேயே இதே நாளில் மீண்டும் ஒரு துயர சம்பவமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-இன் மறைவு அரங்கேறி இருக்கின்றது. இவர் ஆட்சி காலம் பெரிய அளவு ஆர்பாட்டம் இல்லாத ஆட்சி காலமாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Manmohan singh s bmw 7 series loyalty

இதற்கு சான்றாக அவருக்கு பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனம் இருக்கின்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வாஜ்பாய் இடமிருந்து ஆட்சியைக் கை பற்றிய பின்னர், அவர் பயன்படுத்தி வந்த அதே பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-Series) காரையே இவரும் பயன்படுத்தி வந்தார். இந்த காரை அவர் மாற்றவே இல்லை.

எதுவரை என்றால் அவரின் ஆட்சி காலம் முடியும் அந்த காரை மட்டுமே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். பொதுவாக சில பிரதமர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் கேபினட்டை மாற்றி அமைப்பதைப் போலவே, தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களையும் தங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பர்.

ஆனால், இவர் முன்னதாக வாஜ்பாய், அவருடைய ஆட்சி காலத்தில் பயன்படுத்தி வந்த அதே காரையே பயன்படுத்தி வந்தார். தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை கை பற்றி 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தபோதிலும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாற்றாமல் அதையே பயன்படுத்தி வந்தார்.

இதுபோன்று சிக்கனமாக வாழ்ந்த காரணத்தினாலேயே இவர் இப்போதும் மக்கள் மனதில் நீங்கா தலைவராக உள்ளார். பாதுகாப்புக்கு பெயர்போன கார் மாடலே இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஆகும். இதனால்தான் இந்த கார் மன்மோகன் சிங்கிற்கும், அவருக்கு முன்னால் ஆட்சியில் இருந்த வாஜ்பாய்க்கும் பயன்படுத்தப்பட்டது.

துப்பாக்கியின் தோட்டா, கையெறி குண்டுகள், வெடிகுண்டு மற்றும் சிறிய மிஸ்ஸைல் என எந்த மாதிரியான தாக்குதலாக இருந்தாலும் இந்த கார் சமாளித்து அதன் பயணிகளைப் பாதுகாக்கும். இத்தகைய அமோக பாதுகாப்பை வழங்குகின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் இப்போதும் சில பணக்காரர்கள் 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த காரை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் அரசின் அனுமதியை முதலில் வாங்க வேண்டும். மிய உயரிய பாதுகாப்பை விரும்புவோரே இந்தியாவில் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அம்பானி குடும்பத்தினரிடத்திலும் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை இப்போதும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரடெக்சன் எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். முழுமையாக கட்டியமைக்கப்பட்ட காராகவே இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இந்த காரை புக் செய்தால் 6 அல்லது 8 மாதங்கள் வரை கைகளுக்கு வர எடுத்துக் கொள்ளும்.

இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அனைத்து கண்ணாடிகளும் புல்லட் ப்ரூஃப் திறன்மிக்கவை ஆகும். காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டயர்கள்கூட அவ்வளவு எளிதில் பஞ்சர் ஆகாது. மேலும், தீயிற்கும் அது இரையாகாது. இந்த டயர் பஞ்சரே ஆனாலும் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதுபோன்று இன்னும் பல அரிய வகை திறன்களை தாங்கியிருக்கின்ற ஓர் கார் மடாலாகவே தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரடெக்சன் உள்ளது.

இப்போது விற்பனையில் இருக்கும் புதிய வெர்ஷன் மட்டுமல்ல வாஜ்பாய் மற்றும் அவருக்கு பின்னால் வந்த மன்மோகன் சிங் ஆகியோர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்-ம் இதே சூப்பரான பாதுகாப்பு திறன்மிக்கவையே ஆகும். மிக அதீத பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே அந்த காரின் எடையும் மிக மிக அதிகமானதாக இருக்கும். சுமார் 3.9 டன்னுக்கும் அதிக எடைக் கொண்டதே இந்த கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மன்மோகன் சிங்-இன் மறைவு காங்கிரஸ்-க்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும். இந்தியா சார்பாக பல நாடுகளில் இவர் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்திருக்கின்றார். குறிப்பாக, இவர் மத்திய நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் பொருளாதார அளவில் கணிசமான அளவு முன்னேற்றங்களை நாடு கண்டது. மிக முக்கியமாக இவருடைய ஆட்சி காலத்திலேயே ஆர்டிஐ நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 0:38 [IST]
English summary
Dr manmohan singh maintained bmw 7 series from vajpayee throughout his prime minister tenure
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+