சில வருஷங்களில் எவ்வளவு மாற்றம்.. மஹிந்திரா கம்பெனிக்குள் நுழைந்த அந்த ஒரு நபரால் தான் இதெல்லாம் சாத்தியமாச்சு

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக, சமீப காலத்தில் கார்கள் விற்பனையில் மஹிந்திரா அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தியது.

இதற்கு முக்கிய காரணம், மஹிந்திராவில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்திருப்பது ஆகும். கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் மஹிந்திரா கார்கள் பார்க்க மிகவும் அட்டகாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) அவர்கள் மஹிந்திராவுக்கு மாறியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

drag race between mahindra cars

ஏனெனில், டாடாவுக்காக பிரதாப் போஸ் வடிமைத்துக் கொடுத்த நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) உள்ளிட்ட கார்கள் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றதை போலவே, மஹிந்திராவுக்காக பிரதாப் போஸ் வடிவமைத்துக் கொடுத்த எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) காரும், பிஇ 6 (BE 6) & எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களும் மார்க்கெட்டில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி உள்ளன.

இதில், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஒன்றை இங்கு சிலர் பந்தயத்தில் உட்படுத்தி உள்ளனர். பந்தயத்தில் பிஇ 6 காருக்கு போட்டியாக, மற்றொரு பிரபலமான மஹிந்திரா காரான ஸ்கார்பியோ-என் (Scorpio-N) உட்படுத்தப்பட்டுள்ளது. மிக நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ காரின் அடுத்த தலைமுறை மாடலாக ஸ்கார்பியோ-என் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிஇ 6 எலக்ட்ரிக் காரை போன்று நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக ஓட்டுவதற்கு மட்டுமில்லாமல், கரடு முரடான ஆஃப்-ரோடுகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லக்கூடியதாக ஸ்கார்பியோ-என் விளங்குகிறது. இத்தகைய காருடன், மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் காரை பந்தயத்தில் உட்படுத்தும்போது இரண்டில் எது வெற்றி பெறும் என்பதை முன்னரே கணிப்பது கடினமாகும். ஆனால், இந்த பந்தயம் துவங்கிய பிறகு வெற்றி பெற்றது யார் என்பதை சில வினாடிகளிலேயே உறுதி செய்ய முடிந்தது.

ஏனெனில், பந்தயம் துவங்கியதுமே பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஸ்கார்பியோ-என் காரை விரைவாகவே முந்திவிட்டது. எலக்ட்ரிக் கார் என்பதால், பிஇ 6 காரில் உடனடியாக அதிக டார்க் திறன் கிடைக்கிறது. இதன் காரணமாகவே, பந்தயத்தின் துவக்கத்திலேயே ஸ்கார்பியோ-என் காரை முந்திய பிஇ 6 எலக்ட்ரிக் கார் கடைசி வரையில் பந்தயத்தில் முன்னிலை வகித்தது.

பந்தயத்தின் முடிவு முழுவதும் ஒரு பக்கமாக இருந்ததை அடுத்து, பந்தயத்தை மீண்டும் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நடத்தப்பட்ட 2வது பந்தயத்திலும் பிஇ 6 எலக்ட்ரிக் கார் தான் வெற்றி பெற்றது. 2வது பந்தயத்திலும் பிஇ 6 எலக்ட்ரிக் கார் தனது உடனடி டார்க் திறன் மூலமாக ஸ்கார்பியோ-என் காரை எளிதாக முந்தியது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ-என் காரின் டாப் வேரியண்ட்களில் 4x4 டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது.

மறுப்பக்கம், மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஆனது 59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் இவை இரண்டையும் அதிகப்பட்சமாக முறையே 535கிமீ மற்றும் 682கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ரேஞ்ச், எவரிடே மற்றும் ரேஸ் என 3 விதமான ரைடு மோட்களை கொண்டதாக பிஇ 6 எலக்ட்ரிக் கார் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ஜின் அல்லது எலக்ட்ரிக் மோட்டார் மூலம் கிடைக்கும் இயக்க ஆற்றல் ஆனது பிஇ 6 எலக்ட்ரிக் காரில் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், இந்த பந்தயத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் பிஇ 6 காரின் எந்த வேரியண்ட்கள் உட்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. பிரபலமான ஸ்கார்பியோ காரையே தோற்கடித்துள்ளதால், இன்றைய கால மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் செயல்படுதிறனில் எந்த குறையையும் சொல்ல முடியாது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 27, 2025, 8:44 [IST]
English summary
Drag race between mahindra scorpio n and be6 electric car
மேலும்... #car race #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+