இதென்னப்பா டிரெஸ்னு கேக்குற மாதிரியான உடையில் வந்த டிராகன் பட நடிகை! எளிமையான காருல வந்து மாஸ் காட்டிட்டாங்க!

25 வயதே ஆன இளம் நடிகை கயாடு லோஹர். 2021 ஆம் ஆண்டிலேயே இவர் திரை உலகிற்கு அறிமுகமாகினார். இவர் முதலில் நடித்தது கன்னட மொழிப் படம் ஆகும். இதுவரை ஆறு படம் மட்டுமே அவர் நடித்திருக்கின்றார். ஆறாவது படமே டிராகன். இந்த படத்தின் வாயிலாகவே அவர் தமிழ் திரையுலகில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்திருக்கின்றார். இதுதவிர அதர்வா நடிப்பில் தயாராகி வரும் 'இதயம் முரளி' படத்திலும் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆகையால், இப்போது மிகவும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவராக கயாடு லோஹர் மாறி உள்ளார். பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் டிராகன் படமே அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக, இந்த படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை அவர் பிடித்துவிட்டார்.

Kayudu lohar spotted in chennai

இத்தகைய நடிகையே மீண்டும் ஒரு முறை தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கின்றார். ஆனால், இம்முறை நடிப்பிற்காக அல்ல எளிமைக்காகவே ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்திருக்கின்றார், கயாடு லோஹர். ஒரே ஒரு படம் நடித்துவிட்டாலே ஆடி, பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ சொகுசு கார்களின் பயன்பாட்டிற்கு மாறிவிடும் நடிகர்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் கயாடு லோஹர் மிகவும் எளிமையான கார் ஒன்றில் வலம் வந்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

கயாடு லோஹர் டொயோட்டா இன்னோவா காரிலேயே பயணித்திருக்கின்றார். அதுவும் புதிய தலைமுறை இன்னோவாகூட கிடையாது என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இன்னோவா கிரிஸ்டா-விற்கு முன்னர் விற்பனையில் இருந்த பழைய தலைமுறை இன்னோவா (Toyota Innova) என்பது வெளிப்புறத் தோற்றத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

கார் மிகவும் முழுமையாக வீடியோவில் தெரியாத காரணத்தினால் அது எந்த மாடல் என்பதை எங்களால் துள்ளியமாக தெரிவிக்க முடியவில்லை. ஆனால், பழைய வெர்ஷன் டொயோட்டா இன்னோவா என்பதை மட்டும் எங்களால் உறுதியாக கூற முடியும். இந்த காரிலேயே அவர் சென்னையில் வலம் வந்திருக்கின்றார்.

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்கு வரவே அவர் அந்த டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. முற்றிலும் மாறுபட்ட உடை அணிந்திருந்தே அவர் ஃபீனிக்ஸ் மாலுக்கு வந்திருந்தார். இப்போது இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா என இரு அவதாரங்களில் இன்னோவா கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Kayudu lohar getting down from car

இன்னோவா ஹைகிராஸ்-இல் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - ஹைபிரிட் ஆப்ஷனும், இன்னோவா கிரிஸ்டாவில் டீசல் ஆப்ஷன் மட்டும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. ஆனால், பழைய மாடல் இன்னோவா ஒரே அவதாரத்தில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது. அதிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்பட்டன.

இதேபோல், காருக்குள் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இப்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஹைகிராஸ் ஆகிய இரண்டைக் காட்டிலும் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே பழைய இன்னோவா இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. பழைய டொயோட்டா இன்னோவா கார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்பட்டன. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு படம் நடித்துவிட்டாலே விலை உயர்ந்த ஆடம்பர கார் பயன்பாட்டிற்கு மாறிவிடும் நடிகர்களுக்கு மத்தியில் நடிகை கயாடு லோஹர் தனித்துவமான ஓர் நடிகையாக காட்சியளிக்கின்றார். அதேவேளையில், இப்போது அவர் புனேவில் வசித்து வருவதாகவும் அங்கு ஆடம்பர கார்களை அவர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 22, 2025, 9:51 [IST]
English summary
Dragon movie actress kayadu lohar spotted with old toyota innova
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X