என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

"சாலையில் போக்குவரத்து குறைவாகவோ அல்லது அறவே இல்லாமல் இருக்கும்போது அதிக கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும்; இல்லையனில், அது விபரீதத்தில் முடிய வாய்ப்புள்ளது," என்று பலமுறை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பதிவு செய்துள்ளோம். அதனை மீண்டும் நினைவூட்டும் விதமாக ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மீண்டும் நமக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வழங்கி உள்ளது.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், சாலைகளில் போக்குவரத்து மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. பஸ் மற்றும் கார்களின் எண்ணிக்கை இல்லை என்பதுடன் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

இந்த நிலையில், அவசர, அத்தியாவசிய தேவைகளுக்காக பலர் கார், பைக்குகளில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அவசியம் உள்ளது. அவ்வாறு செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்வது அவசியமாகிறது..

MOST READ: இனி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டாம்... மத்திய அரசின் சூப்பர் முடிவு!

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

ரோடு காலியாக இருக்கிறது என்று பலரும் பலம் கொண்ட மட்டும் ஆக்சிலரேட்டரை கொடுத்து அசுர வேகத்தில் நெடுஞ்சாலைகளில் செல்வதை காண முடிகிறது. ஆனால், ரோடு காலியாக இருக்கும்போதுதான் அதிக கவனத்துடன் செலுத்த வேண்டும் என்பது அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

அதாவது, காலியான நெடுஞ்சாலையில் வேகமாக செல்லக்கூடாது என்றில்லை. ஆனால், அந்த வேகம் ஓரளவு வாகனத்தை கட்டுப்படுத்தும் அளவிலேயே இருக்க வேண்டும். காலியான சாலையில் மனிதர்கள், கால்நடைகள், கிராமங்களிலிருந்து நெடுஞ்சாலைக்குள் சட்டென புகும் வாகனங்கள், வேகத் தடைகள் என பல்வேறு ஆபத்துக்கள் உண்டு.

MOST READ: 30 வயசுதான்! அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர்! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

அத்துடன், போக்குவரத்து இல்லாத நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சில வளைவுகளில் கார் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து உள்ளது. குறிப்பாக, சொகுசு கார்களின் திறனை சோதிக்க முடிந்தவரை அழுத்திப் பார்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது எங்கு போய் முடியும் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு சோக சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

ஆமதாபாத் - காந்திநகர் நெடுஞ்சாலையில் அம்பாபூர் என்ற இடத்தில் அதிவேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஏரியில் பாய்ந்தது. அங்கிருந்த வேகத்தடையை அதிவேகத்தில் கடந்தபோது தடுமாறி, அதே வேகத்தில் ஏரிக்குள் பாய்ந்துவிட்டதாக தெரிகிறது.

MOST READ: சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

ஏரிக்குள் பாய்ந்த வேகத்தில் காரின் முன்பகுதி சிறிது நேரத்தில் மூழ்க துவங்கி இருக்கிறது. பாதி மூழ்கிய நிலையில், அந்த காரில் பயணித்த இளம் ஆண், பெண் இருவரும் கண்ணாடி கூரையே திறந்து கொண்டு வெளியேறினர்.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

அருகில் இருந்த கிராமத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், காரில் மேல் அமர்ந்திருந்த இருவரும் நகர முயற்சித்தபோது, தண்ணீரில் விழுந்து தத்தளித்துள்ளனர். அவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை என்று தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் கிராமமக்கள் ஈடுபட்டனற். ஆனால், அதற்கான அவகாசம் இல்லாமல், கிராம மக்கள் கண் எதிரிலேயே அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

MOST READ: 15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மீட்புப் பணியில், தண்ணீரில் இருந்து மூழ்கிய ஆண் சடலம் மீட்கப்பட்டுவிட்டது. அப்பெண்ணை மீட்புப் படையினர் தேடி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடைசி நல்வாய்ப்பாக சன்ரூஃப் கைகொடுத்தும் கூட அவர்கள் பொறுமையில்லாமல் காரிலிருந்து வெளியே வர முயற்சித்ததே, தண்ணீருக்குள் விழுந்து உயிரிழக்க காரணமாக பார்க்கப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் ஆனந்த் மோடி மற்றும் ஃபானி மோடி ஆகியோர் என தெரியவந்துள்ளது.

என்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க!

ஆமதாபாத் நகரின் ஷாஹிபாக் பகுதியில்ள்ள ஜிவ்ராஜ்நகரை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பலன்பூர் சென்றுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. எனவே, காலியான சாலையில் காரை ஓட்டும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. அதேபோன்று, இரவு நேரத்திலும் காலியான சாலைகளில் அதிக கவனத்துடன் ஓட்டுவது அவசியம்.

இந்த செய்தி டீம் பிஎச்பி தளம் மற்றும் திவ்யபாஸ்கர் தளம் செய்திகளை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Even though the roads are empty, we need to drive in a safe on highways.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X