வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

4 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய காரை வாங்கிய 20 நிமிடங்களில் நடந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் லட்சியமாக இருந்து வருகிறது. ஏனெனில் இன்று கார் என்பது ஆடம்பரம் என்பதை தாண்டி, குடும்பத்திற்கான அத்தியாவசியம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆனால் சொந்தமாக புதிய காரை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கான பணத்தை சேமிக்க நாம் பல தியாகங்களை செய்ய வேண்டும்.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

அதுவும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளால் பலரும் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான கால கட்டத்தில், புதிய காரில் முதலீடு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமாக இருக்க முடியாது. ஆனால் சமீப காலமாக கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் புதிய கார் வாங்கும் பலர் தொடர்ச்சியாக விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இப்படிப்பட்ட விபத்துக்கள் தற்போது அன்றாட செய்திகளில் ஒன்றாக மாறியிருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்தான். முதலில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அதன் உரிமையாளர் டெலிவரி பெற்ற அடுத்த சில வினாடிகளில் அந்த கார் விபத்திற்குள்ளானது. அதன் உரிமையாளர்தான் ஷோரூமிற்கு நேரடியாக வந்து காரை டெலிவரி எடுத்துள்ளார்.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

ஆனால் ஷோரூமை தாண்டுவதற்கு முன்னதாகவே, நுழைவு வாயில் பகுதியில் அந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதன்பின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கியா கார்னிவல் கார் ஒன்று அதே பாணியில் விபத்தில் சிக்கியது. டெலிவரி கொடுக்கப்பட்ட அடுத்த வினாடியே, ஷோரூமின் சுவரில் அந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இந்த இரு சம்பவங்களின் வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. தற்போதும் கூட சமூக வலை தளங்களில் அந்த வீடியோக்களை காண முடிகிறது. இந்த இரு விபத்துக்களுக்கும் டிரைவர்களின் கவன குறைவுதான் காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக புதிய கார்களை டெலிவரி எடுக்கும்போது மனதில் உற்சாகம் பொங்கி வழியும்.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

அப்படிப்பட்ட சூழல்களில் கவனக்குறைவாக நடந்து கொண்டால் என்ன நடக்கும்? என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்தின. இந்த 2 விபத்துக்களும் தமிழகத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு புதிய கார் டெலிவரி எடுத்த உடனேயே விபத்தில் சிக்கியுள்ளது. டெலிவரி எடுத்த 20 நிமிடங்களில் அந்த கார் விபத்தில் நொறுங்கியுள்ளது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷையர் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பத்தன்று புத்தம் புதிய லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் (Lamborghini Huracan Spyder) காரை ஒருவர் டெலிவரி எடுத்துள்ளார். இது மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். இந்திய மதிப்பில் இந்த காரின் வேல்யூ 3.89 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை சொந்தமாக்கியதால், அதன் உரிமையாளர் உற்சாகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த காரில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக நெடுஞ்சாலையின் நடுவே அந்த கார் நின்று விட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, காரின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இதனால் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரின் பின்பகுதி நொறுங்கியது. மேலும் வேன் டிரைவருக்கு, தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரில், 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 610 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி சாலையில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது. இப்படிப்பட்ட திறன் வாய்ந்த ஒரு கார், வாங்கிய 20 நிமிடங்களிலேயே விபத்தில் சிக்குவது என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்தான். அத்துடன் புதிய கார்கள் தொடர்ந்து விபத்துக்களில் சிக்கி வருவது கார் ஆர்வலர்கள் கவலை கொள்ளும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.

வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

இங்கிலாந்தில் தற்போது நிகழ்ந்துள்ள விபத்திற்கு காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. புத்தம் புதிய காரில் இயந்திர கோளாறு ஏற்பட்ட விஷயம், அதன் உரிமையாளருக்கு நிச்சயம் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். இந்த விபத்தின் படங்களை WYP Roads Policing Unit டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driver Crashes Brand New Lamborghini Huracan Spyder Supercar. Read in Tamil
Story first published: Friday, June 26, 2020, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X