ரூ. 66,000 கோடி முதலீட்டுடன் களமிறங்குகிறது ஓட்டுநர் இல்லா டோர் டெலிவரி வாகன சேவை!

அமெரிக்காவைச் சேர்ந்த அடானமஸ் டெக்னாலஜி ஆளில்லா தானியங்கி வாகனம் மூலம் டெலிவரி சேவையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சேவையை விரிவாக்கும் வகையில், அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ரூ.66 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர்.

நியூரோ டெலிவரி சர்வீஸ்

கூகுள் நிறுவனத்தின் தானியங்கி வாகனத் துறையில் பணியாற்றிய டேவ் பெர்குசன் மற்றும் ஜியாஜுன் ஜு ஆகிய இருவரும் இணைந்து அடானமஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், இவர்கள் டோர் டெலிவரி செய்யும் சேவையில் ஆளில்லா வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் நியூரோ என்ற வாகனத்தை உருவாக்கினார்கள். இதனை, அமெரிக்காவின் மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டான செயின் க்ரோகெர் உடன் இணைந்து டெலிவரி சேவையை செய்து வருகின்றனர்.

நியூரோ டெலிவரி சர்வீஸ்

முழுக்க முழுக்க ஆன்லைன் வர்த்தகத்தைச் சார்ந்து இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, தனக்குத் தேவையானப் பொருட்களை ஆன்லைன் மூலம் புக் செய்துவிட்டு, முறையான விலாசத்தையும், நேரத்தையும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் நபர்களுக்கு அந்த சேவைக்கு குறைந்தபட்ச சர்வீஸ் சார்ஜுடன் செய்யப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட புரட்சியாக கருதப்படும் இந்த தானியங்கி வாகனங்கள் தற்போதுவரை அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு உபயோகப் பொருட்களைத் தொடர்ந்து, அடானமஸ் டெக்னாலஜி நிறுவனம் நியூரோ வாகனங்கள் மூலம் உணவு டெலிவரியிலும் ஈடுபட உள்ளது.

நியூரோ டெலிவரி சர்வீஸ்

நியூரோ வாகனம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை இந்த வாகன சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இந்த நிறுவனம் சான் பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே தனது சேவையை முழுமையாக செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனம் தனது சேவையை பல்வேறு பகுதிகளிலும் தொடங்கு வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான போதுமான நிதியில்லாத காரணத்தால், தற்போது முதலீட்டாளர்களை எதிர்பார்த்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டேவ் பெர்குசன் கூறியதாவது,

நியூரோ டெலிவரி சர்வீஸ்

"கடந்த இரண்டு ஆண்டுகளாக தானியங்கி வாகனம் மூலம், டோர் டெலிவரி சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த சேவையை நாட்டின் அனைத்தும் மூலையிலும் செயல்படுத்த போதுமான நிதியில்லாத இல்லாத காரணத்தால், முதலீட்டாளர்களை இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. நிறுவனத்தின் வளர்ச்சியுடன், முதலீட்டர்களும் சேர்ந்து வளர இது நல்லதொரு தருணம்" என்றார்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு கோடிசுவரர்களும் தங்களது பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன்படி, அந்த நிறுவனத்தின் மீது அதன் முதலீட்டாளர்கள் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அதில், கிரேலாக் பார்ட்னர்ஸ் மற்றும் கேரோங் கேபிடல் ஆகிய நிறுவனங்களும் உள்ளடங்கும்.

நியூரோ டெலிவரி சர்வீஸ்

இதைத்தொடர்ந்து, சாஃப்ட் பேங்க் என்னும் வங்கி அந்த நிறுவனத்தின்மீது 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின்மீது இதுவரை 940 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 ஆயிரம் கோடியாகும். இதனை அந்த 'நியூரோ' தானியங்கி வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driver Less Delivery Nuro Gets $940 Million Investment. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X