எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவையின் காணொளி சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது மின்சார கார்கள் மக்கள் மத்தியில் வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட மின்சார கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அத்துடன் மின்சார கார்களால், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

இதனால்தான் மின்சார கார்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் இன்னும் மின்சார கார்கள் அவ்வளவாக பிரபலமடையவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில், அதிக அளவிலான மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. அதற்காக அங்கு வசித்து கொண்டுள்ள அனைவருக்கும் மின்சார கார்கள் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது என சொல்ல முடியாது.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

அமெரிக்காவில் அனைத்து மக்களுக்கும் இன்னும் மின்சார கார்கள் நன்கு பழக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு சம்பவம் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்துள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) காரில், இளைஞர் ஒருவர் வந்தார்.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிக பிரபலமான மின்சார கார்களில் ஒன்றுதான் மாடல் 3. உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா மாடல் 3 மின்சார கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் கூட டெஸ்லா மாடல் 3 மின்சார காரை பற்றி பலரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

ஆனால் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த அந்த இளைஞரோ, அது மின்சார கார் என்பதை அறியாமல், அதற்கு பெட்ரோல் நிரப்ப முயன்றார். அமெரிக்காவின் எரிபொருள் நிலையங்களில், பணத்தை செலுத்தி விட்டு, நாமே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி உள்ளது. ஊழியர்கள் இருக்க மாட்டார்கள். இதன்படி அந்த இளைஞர் பணத்தை செலுத்தி விட்டு, பெட்ரோல் நிரப்புவதற்கான குழாயை கையில் எடுத்தார்.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

ஆனால் காரில் பெட்ரோல் நிரப்புவதற்கான வசதி எதுவும் இல்லை. இதனால் தடுமாறிய அந்த இளைஞர் கார் முழுவதையும் சுற்றி சுற்றி பார்த்தார். பின்னர் கைப்பேசியை எடுத்து கூகுள் உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டறிய முயன்றார். அப்போதுதான் இது மின்சார கார் என்பதும், இந்த காரை இயக்குவதற்கு பெட்ரோல் நிரப்ப தேவையில்லை என்பதும் அவருக்கு தெரியவந்தது.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

இதன்பின் தனது தவறை உணர்ந்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அவருக்கு பின்னால் இருந்த சிலர் இந்த சம்பவங்களை எல்லாம் காணொளியாக பதிவு செய்தனர். தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம். இந்த காணொளியை பார்க்கும் பலரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெண் ஒருவர் தனது டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) மின்சார காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்றார். அந்த காணொளியும் சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

இந்த 2 நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள், காரின் உரிமையாளர்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் காரின் உரிமையாளர்களாக இருக்கலாம் என சமூக வலை தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூட அவர்கள் காரை வாங்கி வந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எரிபொருள் நிலையத்தில் ஓட்டுனர் செய்த நகைச்சுவை... காணொளியை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...

அப்படி இருக்கும் பட்சத்தில், மின்சார கார் என்பது தெரியாமல் அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ, காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்ததால், மின்சார காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற அந்த இளைஞர், தற்போது சமூக வலை தளங்களில் நன்கு பிரபலமாகி விட்டார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driver Tries To Fill Up A Tesla Model 3 Electric Car With Petrol: Funny Video. Read in Tamil
Story first published: Friday, July 24, 2020, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X