டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

தமிழகத்தை சேர்ந்த பிரீமியர் பத்மினி கார் ஒன்று, ஓட்டுனரே இல்லாமல் இயங்கும் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது சிறிய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர். ஓட்டுனர் இருக்கையில் யாரும் இல்லாத சூழலில், கார் தானாக ஓடுவதே இதற்கு காரணம். அந்த காலத்து பிரீமியர் பத்மினி கார் ஒன்று, டிரைவர் இல்லாமல் ஓடுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த காரின் கோ-டிரைவர் இருக்கையில் (ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கை), மட்டும் வயதான நபர் ஒருவர் அமர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது கார் எப்படி இயங்கியது? என பலரது புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்ந்து வருகிறது. தாகூர் செர்ரி என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஒரே ஒரு நபருடன் கார் இயங்குவதை, அந்த காணொளி நமக்கு காட்டுகிறது. ஆனால் அந்த நபரும் ஓட்டுனர் இருக்கையில் இல்லை. அதற்கு பதிலாக அவர் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். நெடுஞ்சாலை ஒன்றில், கார் சென்று கொண்டிருந்தபோது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரீமியர் பத்மினி காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் இந்த காணொளியை எடுத்துள்ளனர்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

தேசிய நெடுஞ்சாலையில், எந்தவித சிரமமும் இல்லாமல், அந்த பிரீமியர் பத்மினி கார் லேன் மாறுவதையும், இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த காணொளியை பதிவு செய்த நபர்கள், தமிழில் பேசுவதை கேட்க முடிகிறது. ஓட்டுனர் இல்லாமல் இயங்கிய பிரீமியர் பத்மினி காரை முந்தி சென்று, காரில் வேறு யாராவது உள்ளார்களா? என்பதை அறிய அவர்கள் முற்படுகின்றனர்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆனால் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை தவிர காரில் வேறு யாரும் இல்லை. பின் வரிசை இருக்கைகளும் காலியாகவே இருக்கின்றன. ஓட்டுனர் இல்லாமல் இயங்கி கார், தமிழகத்தை சேர்ந்தது என்பது நமக்கு உறுதியாக தெரியவருகிறது. பதிவு எண் மூலமாக, அந்த கார் தமிழகத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆனால் ஓட்டுனர் இல்லாமல் இந்த கார் எப்படி இயங்கியது? என்ற சந்தேகத்தை, சமூக வலை தளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர். நமது கண்களுக்கு புலப்படாத யாரோ ஒருவர், காருக்கு உள்ளே அமர்ந்தபடி அதனை ஓட்டுகிறார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த காணொளியை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

பொதுவாக நாம் பயன்படுத்தும் கார்களில், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச் மற்றும் பிரேக் ஆகியவற்றுக்கு, ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் மட்டுமே பெடல்கள் இருக்கும். ஆனால் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் பயன்படுத்தும் கார்களில், 2 பக்கமும் பெடல்கள் இருக்கும். அதாவது கோ-டிரைவர் இருக்கைக்கு அடியிலும், பெடல்கள் வழங்கப்பட்டிருக்கும்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

கார் ஓட்டி பழகும் புதிய மாணவர்களால் காரை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயிற்சியாளர், தனது இருக்கைக்கு அடியில் உள்ள பெடல்களை பயன்படுத்தி காரை கட்டுப்படுத்துவார். அதேபோன்ற இரண்டு பக்க பெடல் அமைப்பு, இந்த காரில் இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இதன்மூலம் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான நபர், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச் மற்றும் பிரேக் ஆகியவற்றை கட்டுப்படுத்தியிருக்கலாம். உண்மையில் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபர்தான் அனைத்து ரகசியங்களையும் வைத்துள்ளார். அனேகமாக காரின் ஸ்டியரிங் வீலையும் அவரே கட்டுப்படுத்தியிருக்க கூடும்.

டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

அதாவது தனது வலது கையை நீட்டி, அவர் ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல், மிகவும் அமைதியாக இருப்பதன் மூலம், கார் தானாக இயங்குகிறது என்பது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியிருக்க கூடும். அதாவது மேஜிக் போன்றதுதான் இதுவும்.

மேடையில் மேஜிக் செய்யும் நபர்கள், மிகவும் சாந்தமாக இருந்து கொண்டு, ஒரு சில தந்திரங்கள் மூலம், நம்ப முடியாத விஷயங்களை செய்து காட்டுவார்கள். பிரீமியர் பத்மினி காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரும் கிட்டத்தட்ட அதையேதான் செய்வது போல் தெரிகிறது. ஆனால் இவ்வாறான செயல்பாடுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driverless Premier Padmini Spotted On A National Highway - How Is It Possible? We Explain. Read in Tamil
Story first published: Tuesday, October 13, 2020, 1:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X