வரும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்

Written By:

வரும் 6-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த அதிரடியான உத்தரவை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

சென்ற 1ம் தேதி முதல் தமிழக வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இதை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம், டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இவர்களது மனு கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு கூறிய நீதிபதி துரைசாமி,

தமிழகத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பதவியேற்றுள்ள விஜய் நாராயணன், அசல் ஓட்டுநர் உரிமம் இம்மாதம் 5ம் தேதி வரை கட்டாயமாக்கப்படாது என உறுதியளித்தார்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இதனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்களுக்கு சாதகமான தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கும் சூழல் இருந்தது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இருதரப்பு வாதங்களையும் கேட்டு, செப்டம்பர் 6ம் தேதி முதல் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தலைமை அமர்வு உத்தரவிட்டது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

இதுமட்டுமின்றி வெள்ளம், பேரிடர் போன்ற இயற்கை சீற்றங்களில் அசல் ஓட்டுநர் உரிமத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது அவர்களின் கடமை என இந்த நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

விதிமீறல் செய்பவர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்தால் தான் அதை சரியான நடவடிக்கையாக புரிந்துக்கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வேண்டும்..!!

அசல் ஓட்டுநர் தொடர்பான வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு கட்டாயம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read In Tamil: Tamil Nadu vehicle users Must Carry Original License, Chennai High Court Orders. Click for Details...
Story first published: Monday, September 4, 2017, 18:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark