இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டிரைவ்ஸ்பார்க் தளம்

வாசகர்களின் பேராதரவோடு டிரைவ்ஸ்பார்க் தளம் 2 ஆண்டுகள் நிறைவு செய்து இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு இதே நாளில் தமிழின் முதல் ஆட்டோமொபைல் தளமாக டிரைவ்ஸ்பார்க் உதயமானது.

ஒன்இந்தியா இணைய குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டிரைவ்ஸ்பார்க் தளம் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் செயல்பட்டு வருகிறது. வாசகர்களிடம் அமோக ஆதரவுடன் மாதத்திற்கு 15 மில்லியன் பார்வைகள் என்ற மாபெரும் சிகரத்தை தொட்டிருக்கும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பல புதிய சேவைகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சேவைகள் குறித்தும், அடுத்தடுத்து வர இருக்கும் புதிய பகுதிகள் குறித்தும் பல தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

ஆட்டோமொபைல் உலகின் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வருவதுடன் ஆட்டோமொபைல் துறையின் விசித்திரங்கள், கார் நிறுவனங்கள் பற்றிய சுவாரஸ்யங்கள் நிறைந்த செய்திகளையும், தகவல்களையும் வழங்கி வாசகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

டெஸ்ட் டிரைவ் பகுதி

டெஸ்ட் டிரைவ் பகுதி

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் செய்திச்சேவையில் முதன்மையானதாக வாசகர்களால் பாரட்டுப் பெற்ற டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் பகுதி மூலம் கார்களின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து அனுபவங்களை பகிர்ந்து வருகிறோம்.

சிறப்பு பார்வை

சிறப்பு பார்வை

மார்க்கெட்டுக்கு புதிதாக வரும் கார்களில் இருக்கும் வசதிகள் மற்றும் இன்னபிற தகவல்களை உடனடியாக சிறப்பு பார்வை பகுதியில் படங்களுடன் வெளியிட்டு வருகிறோம்.

டிப்ஸ் கார்னர்

டிப்ஸ் கார்னர்

டிப்ஸ் கார்னர் பகுதி மூலம் வாசகர்களுக்கு பல பயனுள்ள புதிய தகவல்களை வழங்கி வருகிறோம். வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையிலும் வழிகாட்டு முறை செய்திகள் இடம்பெறுகிறது.

 யூஸ்டு கார் வாங்க, விற்க

யூஸ்டு கார் வாங்க, விற்க

உட்கார்ந்த இடத்திலேயே பயன்படுத்தப்பட்ட காரை விற்பதற்கும், வாங்குவதற்குமான ஆன்லைன் சேவையையும் வழங்கி வருகிறோம். இந்த சேவை சிறப்பானதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய கார்கள்

புதிய கார்கள்

கார்கள் பற்றிய விபரங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கு புதிய கார்கள் என்ற புதிய சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தோம். காரின் வேரியண்ட்டுகளுக்கான இடையிலான வசதிகள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் ஏதுவான இந்த புதிய கார்கள் பகுதி வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது.

அடுத்து...

அடுத்து...

வாசகர்களின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்தடுத்து பல்வேறு புதிய பகுதிகளை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். உங்கள் பகுதியில் நடைபெறும் ஆட்டோமொபைல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கார் மற்றும் பைக் சோதனை ஓட்டப் புகைப்படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்த பத்திரிக்கைச் செய்தி அல்லது புகைப்படங்களை முழுமையான விபரங்களுடன் பெயர் மற்றும் மொபைல்போன் எண்ணுடன் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

ரீடர்ஸ் ரிவியூ

ரீடர்ஸ் ரிவியூ

வாசகர்கள் தங்களது பயண அனுபவங்களையும், இன்னும் பிற சுவையான தகவல்களையும் டிரைவ்ஸ்பார்க் தளம் மூலம் உலகம் முழுவதிலும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களது பயண அனுபவத்தை 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் செய்தியாக தமிழில் டைப் செய்து முந்தைய ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் இ மெயில் முகவரிக்கு அனுப்பவும். புகைப்படங்கள் அதிகம் இருந்தால் எமது ஸ்லைடர் செய்தி வடிவில் டைப் செய்து அனுப்புங்கள்.

புதுப்பொலிவு

புதுப்பொலிவு

வாசகர்கள் செய்திகளை எளிதாக படிக்கும் வகையில், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் முகப்பு பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதையும் இந்த தருணத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

நன்றி... நன்றி... நன்றி

நன்றி... நன்றி... நன்றி

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வளர்ச்சிக்கு பேராதரவை நல்கி வரும் வாசகர்களுக்கும், ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2013, 13:43 [IST]
English summary
It was 11.11.11 and on this unique day DriveSpark was born as a small part of OneIndia family. In the next three years we have managed to grow into a brand of our own. Thanks to the love and support from you, our readers. Without you we could have realised our dreams and passion. We believe this to be just the start of a wonderful journey. Happy motoring!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+