டிரைவஸ்பார்க் தமிழ் தளத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது?

By Saravana Rajan

தமிழ் இணைய பத்திரிக்கை உலகின் ஜாம்பவானாக விளங்கும், ஒன்இந்தியா தமிழ் தளத்தின் ஆட்டோமொபைல் பிரிவாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செயல்பட்டு வருகிறது. வாகனத் துறை நிகழ்வுகளையும், விந்தைகளையும் தினசரி அள்ளிக் கொணர்ந்து வாசகர்கள் மனதில் தனி முத்திரை பதித்துள்ளது.

டிரைவஸ்பார்க் தமிழ் தளத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது?

வாகனத் துறை பற்றிய செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், டிரைவிங் டிப்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறை பற்றி இதுவரை கேட்டீராத சுவாரஸ்ய விஷயங்களையும் வித்தியாசமான கோணத்திலும், தலைப்பிலும் தினசரி வழங்கி வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

டிரைவஸ்பார்க் தமிழ் தளத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது?

தேசிய அளவில் முன்னிலையில் ஆட்டோமொபைல் இணையதளங்களைவிட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பெற்றிருக்கிறது. அந்த வகையில், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்கப்படும் சேவைகளை புதிய வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதத்தில், இந்த செய்தியை வழங்குகிறோம்.

நான்கு சக்கர வாகன செய்திப் பக்கம்:

புதிய கார் அறிமுகமாவது குறித்தும், கார்கள் குறித்து தினசரி வரும் செய்திகளை நான்கு சக்கர வாகனங்கள் என்ற இணையப் பக்கத்தில் வாசகர்கள் பெற முடியும். கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு புதிய மாடல்கள் வருகை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. மேலும், இந்த பக்கத்தில் வாகனத் துறையின் பொது செய்திகளையும் படிக்க முடியும்.

01. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

02. டாப் வேரியண்ட் அளவுக்கு வசதிகளுடன் அசத்தும் டொயோட்டா யாரிஸ் காரின் பேஸ் வேரியண்ட்!!

03. சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோர்களுக்கு ஜெயில்... போலீசார் அதிரடி!!

இரண்டு சக்கர வாகன செய்திப் பக்கம்:

பைக், ஸ்கூட்டர்கள் உள்ளடக்கிய இருசக்கர வாகனங்கள் குறித்த தகவல்களை இரண்டு சக்கர வாகனங்கள் என்ற பிரத்யேக இணையப் பக்கத்தில் படிக்கலாம். புதிய பைக்குகள் வருகை, அறிமுகம் மற்றும் அதன் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தினசரி இந்த பக்கத்தில் வாசகர்கள் பெற முடியும்.

01. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது!

02. கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

03. கேடிஎம் 390 பைக்குகளை ஓவர்டேக் செய்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310!!

கார் விமர்சனம்:

பட்ஜெட் கார்கள் முதல் விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரை கார் தயாரிப்பு நிறுவனங்களின் சிறப்பு அழைப்பின் பேரில், எமது சிறப்பு குழுவினர் ஓட்டிப் பார்த்து அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் செய்திகளை எமது கார் விமர்சன இணையப் பக்கத்தில் படித்து பயன்பெறலாம். பிரத்யேகமான படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்திகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

இது புதிய கார் வாங்க இருப்போருக்கு முன்கூட்டியே கார் பற்றி A to Z தகவல்களை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கிறது. வாசகர்கள் தங்கள் சொந்த வாகனம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் செய்திகளும் இந்த பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

01. புதிய டொயோட்டா யாரிஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

02. புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

03. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பைக் விமர்சனம்:

இந்த பகுதியில் புதிய பைக் மாடல்கள், ஸ்கூட்டர்களை எமது குழுவினர் ஓட்டிப் பார்த்து நேரடி அனுவத்தை பகிர்ந்து கொள்ளும் செய்திப் பக்கமாக அமைந்துள்ளது. இது வாசகர்களுக்கு புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு முன் முடிவு எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

01. புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

03. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிப்ஸ்:

கார், பைக்குகளை ஓட்டுவதற்கும், பராமரிப்பதற்குமான பல்வேறு உபயோகமான தகவல்களை எமது டிப்ஸ் செய்திப் பக்கத்தில் வாசகர்கள் படிக்க முடியும். கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பகுதியாக அமைந்து வருவதுடன், வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குமான பதில்கள் இந்த பக்கத்தில் செய்தியாக வெளியிடப்படுகிறது.

01. டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்...!!

02. உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா? நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்!

03. கார் ஓட்டுனர்களுக்கு அவசியமான '2 செகண்ட் ரூல்' பற்றி உங்களுக்கு தெரியுமா?

சுவாரஸ்யச் செய்திகள்:

ஆட்டோமொபைல் துறையில் பொதிந்து கிடக்கும் சுவாரஸ்யங்களையும், இதுவரை கேட்டிராத தகவல்களையும் இந்த பக்கத்தில் வாசகர்கள் படிக்க முடியும். இது தினசரி வழங்கப்படுவதால் வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பகுதியாக அமைந்துள்ளது.

01. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!

02. விமான போக்குவரத்தைவிட புல்லட் ரயில்தான் சிறந்தது... ஏன்?

03. விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

வர்த்தக வாகனங்கள்:

இலகுரக வர்த்தக வாகனங்கள், பஸ், டிரக்குகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் அறிமுகம் மற்றும் அனைத்து செய்திகளையும் இந்த இணையப் பக்கத்தில் சென்று படிக்க முடியும். இது வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கும், வைத்திருப்போருக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

01. புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!!

கார் தகவல் களஞ்சியம்:

முன்னணி ஆங்கில இணையதளங்களுக்கு இணையாக தமிழில் புதிய கார்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தரும் கார் தகவல் களஞ்சிய பகுதியும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் இடம்பெற்றுள்ளது. புதிய கார்களில் இருக்கும் சிறப்பம்சங்கள், எஞ்சின், ஆன்ரோடு விலை உள்ளிட்ட விபரங்களை சில சொடுக்குகளில் பெற உதவுவதுடன், அந்த ரகத்தில் இருக்கும் கார்களின் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து பார்க்கும் வாய்ப்பையும் இந்த பகுதி வழங்குகிறது.

கார் தகவல்  களஞ்சிய பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

பைக் தகவல் களஞ்சியம்:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் விரைவில் புதிய பைக்குகள் குறித்த தகவல்களை பெற உதவும் பைக் தகவல் களஞ்சிய பக்கம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது பைக் வாங்க திட்டமிட்டு இருப்போருக்ககு பேருதவியாக இருக்கும். இது தவிர்த்து, டயர்கள் உள்பட பல புதிய தகவல் களஞ்சிய பக்கங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன.

பைக் தகவல் களஞ்சிய பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.

EMI கால்குலேட்டர்:

கார் வாங்குவோர் எளிதாக மாதத் தவணை மற்றும் முன்பணத்தை தெரிந்து கொண்டு முடிவு எடுப்பதற்கான EMI கால்குலேட்டர் பகுதியும் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

மாதத் தவணை கணக்கீட்டு பக்கத்திற்கு செல்ல  இங்கே  க்ளிக் செய்யவும்.

கார் ஹெல்ப்லைன் எண்கள்:

வாடிக்கையாளர்களின் குறை தீர்ப்பதற்கும், சந்தேகங்களை வினவுவதற்குமான கார் தயாரிப்பு நிறுவனங்களின் அவசர உதவி எண்களை பெறுவதற்கு இந்த விசேஷ இணையப்பக்கம் உதவும். ஒரே சொடுக்கில் உங்களது கார் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் எண்ணை பெற முடியும்.

கார் நிறுவனங்களின் ஹெல்ப்லைன் எண்களை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

உங்கள் ஊரின் தினசரி பெட்ரோல், டீசல், எல்பிஜி, சிஎன்ஜி ஆகிய எரிபொருள்களின் விலை விபரத்தை ஒரு சொடுக்கில் பெறுவதற்கான வாய்ப்பையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்குகிறது. இதுவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் விலை வைத்து விற்பதை கூட கண்டு கொள்ள இந்த பக்கம் உதவும்.

உங்கள் ஊரில் இன்றைய பெட்ரோல் விலையை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இன்றைய டீசல் விலையை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இன்றைய எல்பிஜி விலையை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இன்றைய சிஎன்ஜி விலையை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வீடியோ:

புதிய கார், பைக்குகளின் வீடியோவையும், டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்படும் பிரத்யேக வீடியோக்களையும் இந்த பக்கத்தில் சென்று பார்க்க முடியும்.

வால்பேப்பர்:

புதிய கார்களின் வால் பேப்பர்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம். இவை தினசரி அப்டேட் செய்யப்படுவதால், லேட்டஸ்ட் வால்பேப்பர்களை இங்கே பெறும் வாய்ப்புள்ளது.

படங்கள்:

புதிய கார்கள் மற்றும் டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்படும் படங்களை இந்த பக்கத்தில் பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்குகிறது.

வெற்றிநடை

வாடிக்கையாளர்களின் வழங்கி வரும் பேராதரவிற்கு நன்றியை நவில்கிறது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம்.

உங்களுக்கு பிடித்த பகுதி எது?

எமது செய்திகளில் உங்களுக்கு பிடித்தமான பகுதி எது? என்பதை பின்னூட்ட பகுதியில் கமென்ட் செய்யுங்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க காத்திருக்கிறோம்.

---

ஆசிரியர்

Tamil
English summary
DriveSpark Tamil Reader Feedback.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more