டுவிட்டரின் எதிரியான திரெட்ஸ் உடன் நாங்களும் கை கோர்த்துட்டோம்! நீங்க எப்படி?..
உலக புகழ்பெற்ற சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டுவிட்டர் (Twitter)-க்கு போட்டியாக மெட்டா (Meta) நிறுவனம் 'திரெட்ஸ்' (Threads) எனும் புதிய செயலியை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த செயலிக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-ஆப் ஆகிய தளங்களின் தாய் நிறுவனமே மெட்டா என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே, டுவிட்டருக்கான போட்டி செயலியை களமிறக்கி இருக்கின்றது. இந்த செயலி உடன் ஆட்டோமொபைல்ஸ் துறை சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் வாசகர்களுக்காக உடனக்குடன் வழங்கும் நமது டிரைவ்ஸ்பார்க்-கும் இணைந்திருக்கின்றது. இந்த தளத்தில் எங்களை பின் தொடர இங்கே க்ளிக் செய்யவும்.

இதன் மூலம் திரெட்ஸ் வாயிலாக ஆட்டோ உலகம் சார்ந்த தகவல்களை வெகு விரைவிலும், உடனக்குடனும் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். இதில் கணக்கைத் தொடங்க உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு இருந்தாலே போதுமானது. மிக சுலபமாக திரெட்ஸ் கணக்கையும் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களே ஆகின்ற நிலையில் தற்போது 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் ஃபோன் பயனர்கள் திரெட்ஸ் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இதன் வருகைக்கு முன்னர் வரை டுவிட்டருக்கு எந்தவொரு போட்டியும் இல்லாத நிலையே தென்பட்டது.

இந்த நிலையில் மைக்ரோ ப்ளாக் செயலி பிரிவில் புதிதாக திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் சுமார் 500 எழுத்துக்களுக்கு மிகாமல் வாக்கியங்களை எழுதிக் கொள்ள முடியும். இதேபோல், வீடியோ, புகைப்படம் மற்றும் இணையதள லிங்க் உள்ளிட்டவற்றையும் இதில் பதிவிட முடியும்.
வீடியோவை பொருத்தவரை அதிகபட்சம் 5 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதைத் தாண்டி இருக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தளத்தை எங்களைப் போலவே பிற ஊடக நிறுவனங்களும் விரைவில் பின் தொடரும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே பல ஊடகங்கள் இதை செய்ய தொடங்கிவிட்டன. மேலும், வாகன துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் தங்களின் அப்டேட்டுகளை திரெட்ஸ் வாயிலாக விரைவில் வெளியிட ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டுவிட்டரில் மிகவும் துடிப்பான நபராக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஆனந்த் மஹிந்திரா, திரெட்ஸையும் ஒரு கை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக எங்களிடத்தில் இருந்து சமீபத்திய ஆட்டோ உலகம் சார்ந்த செய்திகள், ரிவியூ தகவல்கள், புதிய வாகனங்களின் புகைப்பட கேலரிகள், ஷார்ட் வீடியோக்கள், வாகன பயன்பாடுகுறித்த டிப்ஸ்கள் என பல முக்கியமான தகவல்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆகையால், எங்களை இந்த திரெட்ஸ் செயலி வாயிலாக பின் தொடர தவற வேண்டாம்.


Click it and Unblock the Notifications









