இன்று 4- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டிரைவ்ஸ்பார்க் தளம்!
வாசகர்களின் பேராதரவோடு டிரைவ்ஸ்பார்க் தளம் 3 ஆண்டுகளை இனிதே நிறைவு செய்து இன்று 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 11.11.2011ல் ஆட்டோமொபைல் செய்தி இணையதளமாக டிரைவ்ஸ்பார்க் இனிதே உதயமானது.
ஒன்இந்தியா இணைய செய்திக் குழுமத்தின் அங்கமாகவும், தமிழ் ஒன்இந்தியா செய்தித் தளத்தின் ஆட்டோமொபைல் பிரிவு இணையதளமாகவும் செயல்பட துவங்கியது. தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி, 5 மொழிகளில் ஆட்டோமொபைல் செய்திகளை வழங்கி வருகிறது. மேலும், தமிழ் கூறும் நல்லுலகின் முதல் ஆட்டோமொபைல் இணையதளம் என்ற பெருமையுடன் பயணத்தை துவங்கியது.

வாசகர்களின் அமோக ஆதரவுடன் கடந்த ஜூன் மாத Com score தர வரிசைப்படி, இந்தியாவின் 4வது பெரிய ஆட்டோமொபைல் தளம் என்ற பெருமையை குறுகிய காலத்தில் பிடித்து வெற்றி நடைபோட்டு வருகிறது. ஆட்டோமொபைல் நிகழ்வுகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்குவது மட்டுமின்றி, கார் வாங்குவோர்க்கு தேவையான புதிய கார்கள் பற்றிய அனைத்து தகவல்கள், ஒப்பீடுகள், விலை விபரங்கள் போன்ற தகவல்களை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது.
மேலும், டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள் மூலம் புதிய கார்களின் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்கள், யூஸ்டு கார்களை வாங்குவது, விற்பதற்கான விளம்பர பகுதி மூலம் மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். மேலும், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் பக்கங்கள் விரைவில் புதுப்பொலிவு பெற இருப்பதுடன், கூடுதல் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வளர்ச்சிக்கு பேராதரவை நல்கி வரும் வாசகர்களுக்கும், ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம். மேலும், பல புதிய சேவைகள் மூலம் உங்களுக்கு பல பயனுள்ள தகவல்களை தருவதற்கு ஆயத்தமாகி வருகிறோம். வாசகர்களின் மேலான ஆதரவுடன் புதிய இலக்குகளை நோக்கி, எங்களது பயணம் தொடர்கிறது.
நன்றி... நன்றி... நன்றி...!!


Click it and Unblock the Notifications








