உங்கள் பேராதரவு, வாழ்த்துகளுடன் இன்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டிரைவ்ஸ்பார்க் தளம்

வாசகர்களின் பேராதரவுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 5 - ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2011 - ஆம் ஆண்டு இதே நாளில் [11 - 11 - 11] தமிழ் கூறும் நல் உலகின் முதல் ஆட்டோமொபைல் இணையதளமாக உதயமானது டிரைவ்ஸ்பார்க் தமிழ்.

ஒன் இந்தியா இணைய செய்தி குழுமத்தின் அங்கமாகவும், ஒன் இந்தியா தமிழ் தளத்தின் ஆட்டோமொபைல் பிரிவாகவும் செயல்பட்டு வருகிறது டிரைவ்ஸ்பார்க் தளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சேவை மிக விரிவானதாகவும், பரந்துபட்டதாகவும் இருந்து வருகிறது. வாசகர்கள் கொடுத்த பேராதரவினால், இன்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5- ஆம் ஆண்டில் டிரைவ்ஸ்பார்க் தளம் அடியெடுத்து வைக்கிறது.

நாளுக்கு நாள் வித்தியாசம்

நாளுக்கு நாள் வித்தியாசம்

ஆட்டோமொபைல் நிகழ்வுகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் வரலாற்றில் பொதிந்து கிடந்த எண்ணற்ற சுவாரஸ்யங்களை வழங்கி, புதிய கோணத்தில் செய்திகளையும், தலைப்புகளையும் தந்து தமிழ் வாசகர்கள் மட்டுமின்றி, பத்திரிக்கை உலகினரின் விருப்பமான செய்தி சேவை தளமாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் மாறியிருக்கிறது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் பகுதியில் புதிய கார்களின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்திகளாக தந்து வருகிறோம். இது புதிய கார் வாங்குவோர்க்கு மிகுந்த பயனளிக்கும் பகுதியாக இடம்பெற்று வருகிறது.

டிப்ஸ் கார்னர்

டிப்ஸ் கார்னர்

கார் ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் காரில் ஏற்படும் பழுதுகள் குறித்த எச்சரிக்கை உணர்வையும், அதற்கான தீர்வுகளையும் வாசகர்களுக்கு அவ்வப்போது டிப்ஸ் கார்னர் என்ற வழிகாட்டுப் பகுதியின் வாயிலாக வழங்கி வருகிறோம்.

புதிய கார்

புதிய கார்

முதல்முறையாக புதிய கார் என்ற பகுதியில் கார்களில் இருக்கும் வசதிகள், அதன் தொழில்நுட்பத் தகவல்களை முழுமையாக அறிந்து கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்கிறது. புதிய கார்கள் பற்றிய இந்த தகவல் களஞ்சிய சேவையை வழங்கும் முதல் தளம் என்ற பெருமை மட்டுமின்றி, நாட்டின் எந்த மூலையில் உள்ள ஊரில் புதிய காரின் ஆன்ரோடு விலைகளை அறிந்து கொள்வதற்கான வசதியும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் உள்ளது. அத்துடன், ஆன்ரோடு விலையின் அடிப்படையிலான கார் மாதத் தவணைகளை கணக்கிடும் EMI Calculator வசதியை முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளம் அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது ஆங்கிலத்தில் இந்த வசதி கிடைக்கும். விரைவில் தமிழிலும் இந்த சேவையை வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

யூஸ்டு கார் வாங்க/ விற்க...

யூஸ்டு கார் வாங்க/ விற்க...

உட்கார்ந்த இடத்திலேயே பயன்படுத்தப்பட்ட காரை விற்பதற்கும், வாங்குவதற்குமான ஆன்லைன் சேவையையும் வழங்கி வருகிறோம். இந்த சேவை சிறப்பானதொரு வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், குறைவான விலையில் கார் வாங்குவோர்க்கு இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

எதிர்நோக்குகிறோம்

எதிர்நோக்குகிறோம்

வாசகர்கள் தங்களது பயண அனுபவங்களையும், இன்னும் பிற சுவையான தகவல்களையும் டிரைவ்ஸ்பார்க் தளம் மூலம் உலகம் முழுவதிலும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களது பயண அனுபவத்தை 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் செய்தியாக தமிழில் டைப் செய்து முந்தைய ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் இ மெயில் முகவரிக்கு அனுப்பவும். புகைப்படங்கள் அதிகம் இருந்தால் எமது ஸ்லைடர் செய்தி வடிவில் டைப் செய்து அனுப்புங்கள். பல ஆயிரக்கணக்கான வாசகர்களை உங்களது செய்தி சென்றடையும் என்பதோடு, உங்கள் பயண நினைவுகளை எப்போது வேண்டுமானாலும் எங்களது செய்தி இணைப்பின் வாயிலாக பார்த்து படித்து பரவசம் அடையலாம். அத்துடன், பிறருக்கும் உங்களது அனுபவத்தின் வாயிலாக பல நல்ல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இப்போது எளிது

இப்போது எளிது

வாசகர்களின் பின்னூட்டங்கல் அடிப்படையில், செய்திகளை எளிதாக படிக்கும் வகையில், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் முகப்பு பக்கம் சமீபத்தில் அதிக செய்திகளை படிக்கும்வித்ததில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று, தற்போது மொபைல்போனில் டிரைவ்ஸ்பார்க் செய்திகளை விரைவாக படிக்கும் விதத்தில் மாற்றங்களை செய்திருக்கிறோம்.

நன்றி... நன்றி... நன்றி!!

நன்றி... நன்றி... நன்றி!!

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வளர்ச்சிக்கு பேராதரவை நல்கி வரும் வாசகர்களுக்கும், ஆரோக்கியமான பின்னூட்டங்கள் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம். இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பின்னூட்டங்களையும், தகவல்கள் மற்றும் படங்களை அளித்து எங்களுக்கு உற்சாகம் அளித்து வரும் எமது வளர்ச்சியில் கூடுதல் அக்கறை செலுத்தும் வாசகர்களுக்கு நன்றிகள் கோடி...!!

வேண்டுகோள்

வேண்டுகோள்

வாசகர்களின் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்தடுத்து பல்வேறு புதிய பகுதிகளை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். உங்கள் பகுதியில் நடைபெறும் ஆட்டோமொபைல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கார் மற்றும் பைக் சோதனை ஓட்டப் புகைப்படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்த பத்திரிக்கைச் செய்தி அல்லது புகைப்படங்களை முழுமையான விபரங்களுடன் பெயர் மற்றும் மொபைல்போன் எண்ணுடன் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 11, 2015, 10:19 [IST]
English summary
It was 11.11.11 and on this unique day DriveSpark was born as a small part of OneIndia family. In the next three years we have managed to grow into a brand of our own. Thanks to the love and support from you, our readers. Without you we could have realised our dreams and passion. We believe this to be just the start of a wonderful journey. Happy motoring!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+