ஓட்டுநர் உரிமங்களுக்கான காலாவதி தேதி நீட்டிப்பு! உங்கள் லைசென்ஸ் நிலை என்ன தெரியுமா?
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை காலாவதியாக இருந்த ஓட்டுநர் உரிமம், பயிற்சி உரிமம், மற்றும் கண்டக்டர்களுக்கான உரிமம் ஆகியவை பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் ஓட்டுனர் உரிமம் பயிற்சி உரிமம் மற்றும் கண்டக்டர்களுக்கான உரிமம் ஆகியவற்றை மாநில அரசுகள் தரப்பிலிருந்து சாலை போக்குவரத்து துறை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. என்னதான் மாநில அரசுகள் இதை வழங்கினாலும் இதை வழங்குவதற்கான தளமாக மத்திய அரசு அமைத்துக் கொடுத்த சாரதி மற்றும் பரிவாகன் என்ற தளத்தில் தான் இவை எல்லாம் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த பணிகளுக்கு எல்லாம் ஒருங்கிணைந்த தளமாக சாரதி மற்றும் பரிவாகன் ஆகிய தளங்கள் செயல் பட்டு வரும் நிலையில் இந்த தளம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை அப்டேட் காரணமாக முடக்கப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய பலரும் சிரமப்பட்டார்கள். இதனால் இந்த தளம் வழியாக நடக்க வேண்டிய வேலைகள் எல்லாம் முடங்கின.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை காலாதிபதியாக இருந்த ஓட்டுநர் உரிமம் பயிற்சி உரிமம் மற்றும் கண்டக்டர்களுக்கான உரிமம் ஆகியவை எந்தவித அபராதங்களும் இல்லாமல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ள உரிமம் வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் இந்த உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பை வழங்கி வருகிறது. இதை புதுப்பிக்கும் போது அவர்கள் அபராத கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.
ஏற்கனவே குறிப்பிட்ட இந்த தேதிக்குள் எப்படி உரிமத்தை புதுப்பிக்க வேண்டுமோ அதே முறையில் தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை சாரதி தளத்தில் மேம்பாட்டு பணிக்காக பல்வேறு வேலைகள் நடந்ததால் அது சரியாக பணியாற்றாமல் இருந்தது.

இந்நிலையில் இவர்களுக்கு மட்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக இந்த கால நீட்டிப்பு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் ஓட்டுனர் உரிமம் பயிற்றுனர் உரிமம் மற்றும் கண்டக்டர்களுக்கான உரிமம் ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ளவும் அதே நேரம் ஏற்கனவே புதிதாக லைசென்ஸ் பெற விரும்பியவர்கள் சோதனை காண விண்ணப்பத்தையும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 நாட்களில் சர்வர் சரியாக வேலை செய்யாததால் பலருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைபெறாமல் இருந்தது. இதனால் அவர்கள் அதை செலுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய போக்குவரத்து துறை இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பயனாளிகள் பயன்பெறுவார்கள்.
பரிவாகன் என்ற தளமும் மொபைலில் ஆப்பாகவும் சாரதி தளமும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் பரிபாகன் தளத்தின் மூலமும் பல்வேறு பணிகளை செய்ய முயன்றவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு இந்த அவகாசம் என்பது நீட்டிக்கப்படாது. அதனால் அனைவரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் தங்கள் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஒருங்கிணைந்த தளம் மூலம் இப்படியாக இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கான சேவையை வழங்கி வரும் நிலையில் இந்த தளத்தில் மேம்பாடு செய்யப்படும் போது அதை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு இப்படியான பிரச்சினைகள் ஏற்படும். இனி இது போன்ற தவறு நடக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









