போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு கடுமையாக்கப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் வெறும் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால் சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 10 சதவீதமாக உள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

மேலும், உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களை காட்டிலும் கடந்த ஆண்டில் சாலை விபத்தினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என மற்றொரு புள்ளி விபரம் வேறு நம்மை பயமுறுத்துகிறது.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்குமென்று சற்று சிந்தித்து பார்த்தால், மது உள்ளிட்ட போதை பொருட்கள் தான் நமது நினைவிற்கு வரும். ஆம் போதை பொருட்களினால் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன என்பது உண்மை தான்.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

அதேநேரம் வேறு சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களால் அவர்களுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் செல்வோருக்கும் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களிலும் பலரும், இந்த கையில் காசை கொடுத்து அந்த கையில் ஓட்டுநர் உரிமத்தை வாங்கியவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதேநேரம், தற்போது இருக்கும் தகுதி தேர்வு முறை ஈஸியாக இருப்பதால் எளிதில் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படுகிறது என்ற புகாரும் பரவலாக உள்ளது.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

இதை எல்லாம் கருத்தில் கொண்டே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வை கடுமையாக்க மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

இதில், ஓட்டுநர் உரிமம் பெற விழைபவர்களுக்கு இனி கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். வாகனத்தை பின்னாலிருந்து (ரிவர்ஸ்) இயக்குவது கூட மிக துல்லியமாக இருக்க வேண்டும். அதேபோல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதிப்பெண் 69 சதவீதத்தை தாண்ட வேண்டும்.

போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!

அப்போது தான் வாகன ஓட்டிகள் உரிமம் பெற முடியும். வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தை பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புவது என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Most Read Articles

English summary
Driving licence test to be tougher, informs Nitin Gadkari. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X