ஜூன் 1ம் தேதி புது ரூல்ஸ் வந்ததுக்கு அப்புறம் எப்படி டிரைவிங் லைசென்ஸ் எடுக்கனும்? இதுதான் புது ரூல்ஸ்!
வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் புதிய ஓட்டுநர் உரிமம் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இந்த ஓட்டுனர் உரிமம் விதிமுறை அமலுக்கு வருவதால் மக்களுக்கு இது என்ன வகையிலான பலனை அளிக்கப்போகிறது. ஏற்கனவே இருக்கும் விதிமுறைக்கும் இந்த விதிமுறைக்கும் என்ன வித்தியாசம் இதனால் மக்கள் அவதிப்பட போகிறார்களா அல்லது மக்கள் பிரச்சினை குறை போகிறதா என்ற விவரங்களை காணலாம்.
மத்திய அரசு அறிவித்துள்ளபடி வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 2024 புதிய ஓட்டுநர் உரிமம் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆமலுக்கு கொண்டு வருகிறது. இந்த விதிமுறையால் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர கொண்டுவரப்பட உள்ளன. இது படிப்படியாக இந்தியா முழுவதும் அவளுக்கு வருகிறது.

தற்போது இருப்பதை விட சுலபமாக வழிமுறைகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு எளிதாக ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையின் கீழ் ஒருவர் தனக்கு வாகன போட்டிக்கான ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றால் அவர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை.
அதற்கு பதிலாக அரசு நேரடியாக ஓட்டுநர் பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு உரிமத்தை வழங்குகிறது. இதனால் ஓட்டுனர் பயிற்சி வழங்கும் நிறுவனங்களே இனி நேரடியாக ஓட்டுநர் உரிமத்தையும் விண்ணப்பித்து வாங்கி கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான டிரைவிங் லைசென்ஸ்கள் உள்ளன.

அதில் அதிகமாக பிரைவேட் கார்கள் மற்றும் டூவீலர்களுக்கான ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுபோக கமர்சியல் வாகனங்களுக்கான தனி லைசென்ஸ் இருக்கிறது. சர்வதேச ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் லைசென்ஸ் என்று தனியாக இருக்கிறது. இந்த மூன்று வகையான டிரைவிங் லைசென்ஸ்கள் தற்போது வழங்கப்படுகின்றன.
முதல் கட்டமாக ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்கும் முன்னர் பயிற்சி உரிமம் வழங்கப்படும் இப்படி பயிற்சி உரிமம் 6 மாதங்களுக்கு செல்லும்படியாகும். இந்த காலத்தில் அந்த ஓட்டுனர் சரியாக வாகனம் ஓட்டி படித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு சோதனை செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இப்படியாக வழங்கப்படும் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது கியருடன் கூடிய இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கான இன்சூரன்ஸாக இருக்கும்.

இந்த ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்த நபராக இருந்தால் போதும் அவர் மனநிலையிலும் உடல் நிலையிலும் வாகனம் ஓட்ட தகுதியானவராகவும் இருக்க வேண்டும். அடுத்ததாக கமர்சியல் வாகனங்களை பொருத்தவரை மூன்று விதமான பிரிவுகளில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. ஹெவி, மீடியம், மற்றும் லைட் மோட்டார் வாகனங்களுக்காக தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த ஓட்டுனர் உரிமத்தை பெற குறைந்தபட்சம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 பூர்த்தியாகி இருக்க வேண்டும். இப்படியாக வழங்கப்படும் லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். ஏற்கனவே தனி நபர் லைசென்ஸ் ஒருவர் வைத்திருந்தாலும், அவர் கமர்சியல் வாகனத்தை ஓட்ட தனி லைசென்ஸ் வாங்க வேண்டும்.
அடுத்ததாக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு சென்று வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸாக இருக்கிறது. இதன் மூலம் இந்திய சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை ஏற்கும் நாடுகளில் இந்த லைசென்சை வைத்து வாகனம் ஓட்ட முடியும். இந்த லைசென்ஸ் ஒரு ஆண்டுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த லைசென்ஸ் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாகவே லைசென்ஸ் எடுக்க வேண்டும்.
இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றமான விஷயமாகும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் அல்லது 18 வயதுக்கு நிரம்பி டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன படி குற்றம் ஆகும். போலீசார் அவர்களுக்கு ரூபாய் 5000 வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. அவர் வாகனம் ஓட்டும்போது வாகனம் விபத்தில் சிக்கினால் அதற்கான இன்சூரன்ஸ் பணமும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் அதிகாரத்தை இனி ஓட்டுநர் பயிற்சி வழங்கும் பள்ளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அரசுக்கான பணியை குறைக்கும் ஒரு முயற்சி தான் அதேநேரம் எந்த அளவுக்கு தகுதியான நபர்களுக்கு இந்த உரிமம் வழங்கப்படுகிறது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் தற்போதைய செய்துவிட்டால் எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications









