இன்று முதல் ஆர்டிஓ அலுவலக புரோக்கர்களுக்கு ஆப்பு! லைசென்ஸ் எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்தது!

இன்று முதல் இந்தியா முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் வழங்கப்படும். லைசென்ஸ் நடைமுறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் இனி லைசென்ஸ் எடுக்க யாரும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. தனியார் பயிற்சி மையத்திலேயே இனி லைசென்ஸ் பெற முடியும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு என்ன லாபம். இனி லைசென்ஸ் எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

மதிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது. அதன்படி இந்தியா முழுவதும் இனி டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் புதிய மாற்றம் கொண்டு வரப் போவதாகவும் அறிவித்திருந்தது. அதன்படி இன்று ஜூன் 1ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் எல்லாம் அமலுக்கு வந்துள்ளன.

driving license new rules

இதனால் இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. டிரைவிங் ஸ்கூல் அல்லது தனியார் டிரைவிங் சோதனை மையத்தில் இனி டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டாயம் அர்டிஓ அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் முன்னிலையில் வாகனம் ஓட்டி காண்பித்தால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என்ற விதிமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இனி போக்குவரத்தில் சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கவும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒருவர் வாகனம் ஓட்டினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும். இதுவே 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு ரூபாய் 25,000 அபராதமும் அவர்களது பெட்ரோல் மீது கடும் நடவடிக்கையும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

driving license new rules

அடுத்ததாக அரசு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் அரசு வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது. இது ஒவ்வொரு கட்டமாக அமலுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் வரும் மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பதிலாக மாசு அல்லாத எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்காகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய டிரைவிங் லைசென்ஸ் விதிமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைத்திருக்கிறது. தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்றால் புரோக்கர் நடைமுறை மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. என்னதான் மக்கள் நேரடியாக சென்று ஆர்டிஓ அலுவலகங்களில் லைசென்ஸ் விண்ணப்பிக்க முடியும் என்றாலும், புரோக்கர்கள் பலர் இடையில் தலையிட்டு லைசென்ஸ் பெற்று தர கமிஷங்களை பெற்று வருகிறார்கள்.

driving license new rules

இனி பொதுமக்கள் லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளி அல்லது தனியார் ஓட்டுநர் டெஸ்டிங் மையம் ஆகியவற்றில் நேரடியாக சென்று டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எந்த ஒரு செயலுக்காகவும் அவர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வர வேண்டிய தேவை கிடையாது.

ஆர்டிஓ அலுவலகங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை கண்காணித்து அவர்கள் எவ்வளவு பணம் வசூல் செய்கிறார்கள். சரியான விதிமுறைப்படி வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குகிறார்களா என சோதனை செய்யும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கும் பணி சுமை குறையும். அதே நேரம் தரமான டிரைவர்களும் கிடைப்பார்கள்.

இது புதிய டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான விதிமுறை மட்டுமல்ல ஏற்கனவே டிரைவிங் லைசென்ஸ் எடுத்தவர்கள் காலாவதியாகிவிட்டால் அந்த காலாவதியான டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும், இந்த வழிமுறையை பின்பற்றப்படும் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாகிறது? நடைமுறையில் இதில் வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் தற்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளியிலேயே டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் விதிமுறை என்பது அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பொது மக்களுக்கு சுலபமாக டிரைவிங் லைசென்ஸ் எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க அதிக பணமும் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 10:22 [IST]
English summary
Driving license new rules india june 1 2024
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X