இனி ஈஸியா லைசென்ஸ் வாங்க முடியாது! இப்படியெல்லாம் ரூல்ஸ் வருதா?
இந்தியா முழுவதும் தற்போது வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா முழவதும் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடை முறையை மேலும் கடினப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக கேரளா மாநிலத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேரளா மாநிலத்தில் வாகன லைசென்ஸ் எடுக்க புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருக்கிறது. இதில் முதல்படியான பயிற்சி லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு, பிராக்டிக்கல் டிரைவிங் சோதனைகள், உள்ளிட்ட விஷயங்களை மேலும் கடுமைக்க முடிவு செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு கேரளாவில் மட்டும் மொத்தம் 44,000 விபத்துகள் நடந்துள்ளது. இதில் சுமார் 3700 பேர் பலியாகியுள்ளனர். இதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை பயிற்சி லைசென்ஸ் பெற 20 கேள்விகளுக்க பதிலளிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இனி 30 கேள்வியாக இது உயர்த்தப்படும் எனவும் இதில் குறைந்தபட்சம் 18 கேள்விகளுக்காவது சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு கேள்விக்கும் 30 விநாடிகள் வரை நேரம் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இனி 25 கேள்விகளுக்கு கட்டாயம் சரியான பதிலை அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வரும் திட்டமும் இருப்பதாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் கேள்விகளுக்கு தவறாக பதிலளித்தால் 0.25 மதிப்பெண் நெகட்டிவாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் அந்த கேள்வியை அவரால் ஸ்கிப் செய்ய முடியும். ஸ்கிப் செய்தால் நெகடிவ் மதிப்பெண் கிடையாது. தவறாக பதிலளித்தால் நெகடிவ் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கேரள அரசு MVD LEADS என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிலபஸ், பயிற்சி பரிட்சை, மாடல் பரிட்சை எல்லாம் செய்ய முடியும். மேலும் இதில் சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சியையும் ஆன்லைன் மூலம் செய்ய முடியும். அடுத்தாக சிமுலேஷன் சோதனை நடைபெறும். இதில் சிமுலேட்டரில் லைசென்ஸ் பெறுபவர் அமர்ந்து வாகனம் ஓட்ட வேண்டும் ஸ்கிரீன்வரும் தடைகளுக்கு ஏற்ப வாகனம் ஒட்ட வேண்டும். இதில் ரியல் டைமில் பிரேக் ரெஸ்பான்ஸ், உள்ளிட்ட விஷயங்கள் கணக்கிடப்படும்.
இதில் 10 விதமான சோதனைகள் நடத்தப்படும். கிராம சாலைகளில் பயணிப்பது, கட்டுமான பணி நடக்கும் இடங்கிளல் பயணிப்பது, குறுகலான சாலைகளில் பயணிப்பது, ஃபேடட் மார்க்கிங்கில் பயணிப்பது உள்ளிட்ட உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும். இதில் ரெஸ்பான்றா் ஸ்பீடு கணக்கிடப்படும். மொத்தம் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் 30 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற்று விட முடியும். சிறிய சிறிய தாமதங்கள் கூட மார்க் குறைய வழிவகுக்கும். இது சாலையில் எப்பொழுதும் வாகன ஓட்டிகள் அலர்ட்டாக இருக்க உதவும்.

அடுத்ததாக பிராக்டிக்கல் தேர்வு மறுவடிவமைப்பு செய்பய்படுகிறது. இதில் லைசென்ஸ் பெறுபவர்கள் ஆங்குலர் மற்றும் பேரலல் பார்க்கிங், கிராடியன் டிரைவிங், சிக்ஸா் மேனுவர் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும். இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிராக்குகளில் சோதனை நடத்தப்படும். இது ரியல் வேர்ல்ட் கண்டிஷனில் இருக்கும். இந்த சோதனையை வெற்றிகரமாக முடிப்பது சுலபமான விஷயம் கிடையாது . சர்வதேச அளவில் இதில் கலந்து கொள்பவர்களில் 40-52 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள்.
அடுத்த முக்கியமான சோதனை பொது சாலைகளில் சோதனை செய்வது, குளோஸ் செய்யப்பட்ட சாலையில் இல்லாமல் உண்மையான டிராஃபிக்கில் சோதனை நடத்தப்படும். இது நீண்ட நாட்களாக லைசென்ஸ் பெறுபவர்களுக்கு நடத்தப்படும் சோதனைக்கும் ரியல் வேர்ல்டிற்கும் சம்மந்தம் இல்லை என்ற விஷயத்தை எதிர்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் பெரும்பாலும் தொழிற்நுட்பத்தை சார்ந்து இந்த சோதனையில் டேஷ்போர்டு கேமராக்கள் பொருத்தப்படும், ஜிபிஎஸ் கருவி பொரத்தப்படும். இதனால் லைசென்ஸ் எடுப்பவரின் ஃபெர்பார்மெஸ் முழுமையாக ரெக்கா்டு செய்யப்படும். இதில் ஒளிவு மறைவற்ற சோதனை நடத்த முடியும். கடந்த 3 மாதம் நடந்த சோதனை முடிவுகள் எல்லாம் சேமிப்பில் இருக்கும். இதனால் பிரச்சனை ஏற்பட்டால் அந்த தரவுகளை பார்க்க முடியும்.
இது போக ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களுக்கும் புதிய விதிகள் வரவுள்ள. அதன்படி 15 ஆண்டு பழைய காரில் கார் ஓட்ட சொல்லிகொடுக்க கூடாது. இந்த கார்களில் கேமரா மற்றும் டிராக்கிங் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் போராட்டம் நடத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.,
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் சுலபமாக கிடைக்கிறது. பலர் வாகனம் ஓட்ட தெரியாமலேயே லைசென்ஸ் பெற்றுவிடுகின்றனர். இதனால் இந்த சோதனையை கடினப்படுத்த வேண்டும். இதனால் சாலையில் வாகன விபத்து குறைவதற்கான வாய்ப்பு குறையும்.


Click it and Unblock the Notifications









