கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா?

கார் ஓட்டும் போது ஒருவர் ஓட்டும் ஸ்டைலை வைத்தே அவர் எந்த மூடில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது. இது குறித்த விரிவாக காணலாம்

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

நீங்கள் சில சமயம் கோபமாக இருப்பீர்கள், சில சமயம் சந்தோஷமாக இருப்பீர்கள், சில சமயம் வருந்தம், சோகம், துக்கம் என ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மன நிலையில் இருப்பீர்கள். இது நீங்கள் மட்டுமல்ல சராசரி மனிதர்கள் எல்லோருக்குமே இப்படியாக ஏதோ ஒன்று மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இது எல்லாம் கலந்தது தான் மனித வாழ்க்கை இப்படியாக நீங்கள் எந்த மூடில் இப்பொழுது இருக்கிறீர்கள் என நீங்கள் வாகனம் ஓட்டும் முறையை வைத்தே சொல்லி விட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

ஆம் இது உண்மையிலேயே சாத்தியம் தான். இது எப்படி என தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் நம் ஆள் மனது எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இப்பொழுது காரில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள், சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடி வந்தால் அந்த நொடியே நம்மையே அறியாமல் நாம் காரை பிரேக் போட்டு நிறுத்திவிடுவோம். அதை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் இருந்தாலும் நம்மையே மீறி நம் ஆழ் மனது அதை செய்ய வைத்துவிடும்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

இது நாம் கார் ஓட்டும் போதே நம் மனதில் ஆக்ஸிலரேட்டர் எது, பிரேக் எது என தொடர்ந்து படித்தும் பயிற்சி செய்தும் வந்ததால் ஆழ் மனதில் பதிந்திருக்கும். இந்த எண்ணம் தான் நம்மையே அறியாமல் அந்த இடத்தில் பிரேக் போட வைக்கிறது. இந்த ஆழ் மனது எப்படி நமக்கே தெரியாமல் நம் டிரைவிங்கை மாற்றுகிறதோ அப்படி தான் உங்கள் எண்ணங்களும், சிந்தனையும் உங்கள் டிரைவிங் பேட்டனை மாற்றியமைக்கும்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உங்களையே அறியாமல் உங்கள் டிரைவிங்கை பாதிக்கும் விஷயங்கள் மூன்று தான், உங்கள் கோபம், உங்கள் நம்பிக்கை, உங்கள் கொள்கை இந்த மூன்றும் நேரடியாக உங்கள் கார் ஓட்டுவதை பாதிக்கும். இந்த மூன்றும் ஒருவரின் ஆழ் மனிதிலிருந்து ஏற்படக்கூடியது.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

இதனால் இது அவர்களது டிரைவிங் பேட்டனையே மாற்றியமைக்கும். ஒரு மனிதன் கடும் கோபத்தில் இருக்கும். போது அவன் மிகவும் கவனக்குறைவாகவோ அல்லது அதிவேகமாகவோ காரை ஓட்டுவான் என ஒரு ஆய்வு சொல்கிறது.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

இதில் நம்பிக்கையும், கொள்கையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் அதுவும் ஒருவரின் கார் ஓட்டும் பேட்டனை மாற்றியமைக்கும். நம்பிக்கையை பொருத்தவரை சிலர் உதாரணமாக நேரில் ஏதாவது விபத்தை பார்த்திருக்கலாம், அல்லது விபத்தை சந்தித்திருக்கலாம்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டதோ அதே சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டால் கார் விபத்தில் சிக்கி விடுமோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டு அந்த நேரத்தில் அவர்களின் வழக்கமான டிரைவிங் பேட்டன் மாறுபடும். இதில் ஏற்கனவே நடந்த விபத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட சூழ்நிலை விபத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

அதே போல கொள்கையும் ஒருவரின் டிரைவிங் பேட்டனை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட கொள்கை கொண்ட ஒருவர் டிரைவிங்கில் அந்த கொள்கைக்கு எதிரான ஒரு செயலை செய்ய விரும்பமாட்டார். உதாரணமாக ஒருவர் ஏசியை பயன்படுத்துவது பூமியை சூடாக்கும் வழி என நினைத்தால் அவர் வாகனத்தில் ஏசியைபயன்படுத்தாலேயே பயணிப்பார். இதனால் அவர் டிரைவிங் பேட்டன் மாறுபடும். இப்படியாக ஒருவர் கார் ஓட்டும் ஸ்டைலை பொருத்தே அவர் எந்த மூடில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

ஒருவர் கார் அதி வேகமாக கட்டுபாடுகளை இழந்து சென்றால் அவர் கோபத்தில் இருக்கிறார் என கருதலாம், ஒருவர் காரில் வழக்கதை விட மெதுவாக சென்றால் அவர் பயத்தில் இருக்கிறார் என கருதலாம். ஒருவர் கார் குறைவான வேகத்திலேயே தரிகெட்டு ஓட்டினால் அவர் சந்தோஷத்தில் தலைகால் புரியாத நிலையில் இருக்கிறார் என கருதலாம்.

கார் ஓட்டும் ஸ்டைலை வைத்தே ஒருவர் எந்த மூடில் இருக்கிறார் என கண்டுபிடித்து விடலாம் எப்படி தெரியுமா . . .

ஒருவர்சாலையில் சரியான லேனில் செல்லாமல் அடுத்தடுத்த லேனிற் மாறிக்கொண்டிருந்தால் அவர் அவசரத்தில் இருக்கிறார் என கருதலாம். இப்படியாக ஒவ்வொரு டிரைவிங் பேட்டனும் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்துவதாக அந்த ஆய்வு சொல்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driving pattern says the mood of the driver
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X