பெட்ரோல் விலை உயர்வில் நம் இந்தியாவிற்கே டஃப் கொடுக்கும் லண்டன் - ஒரே வருடத்தில் 5 மடங்கு உயர்வு!!

பெட்ரோல் & டீசல் விலைகள் நம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக, நம் இந்தியாவில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஹாங்காங் இந்த விஷயத்தில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் தலைநகர் லண்டனும் சமீப காலத்தில் அதிகப்படியான பெட்ரோல் உயர்வை கண்டுள்ளது.

லண்டனில் கடந்த 2021ஆம் ஆண்டில் 550 யூரோக்களுக்கு (ரூ.48,842) விற்கப்பட்டு இருந்த ஒரு பேரல் பெட்ரோலின் விலை கடந்த 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாக 2,512 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.2,23,076 ஆகும். கடந்த வருடத்தில் பெட்ரோலின் விலை இவ்வாறு அதிகப்படியாக உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் ஆகும்.

பெட்ரோல் விலை உயர்வில் இந்தியாவிற்கே டஃப் கொடுக்கும் லண்டன்!

இந்த போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் என்று பார்த்தால், அது லண்டன் தான். லண்டனில் மற்ற ஐரோப்பிய நகரங்களான பாரீஸ், ஒஸ்லோ மற்றும் ஸுரிச் நகரங்களில் இருப்பதை காட்டிலும் அதிக விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு ஏன், வட அமெரிக்காவில் கூட எந்தவொரு நகரத்திலும் இந்த அளவிற்கான விலையில் பெட்ரோல் விற்கப்படுவது இல்லை.

இருப்பினும் லண்டனில் பெட்ரோல் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரியதாக குறைந்தப்பாடில்லை. லண்டன் மட்டுமின்றி, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பெட்ரோல் கார்கள் மக்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக விளங்குகிறது. காற்று மாசுவை ஏற்படுத்தும் பெட்ரோல் & டீசல் கார்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்க பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் கடந்த பல வருடங்களாகவே நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

பெட்ரோல் விலை உயர்வில் இந்தியாவிற்கே டஃப் கொடுக்கும் லண்டன்!

நம் இந்தியாவில் கூட மத்திய அரசு பெட்ரோல் & டீசல் கார்களுக்கு பதிலாக 2030க்குள் மக்களில் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கையில் குறைந்தது 30% எலக்ட்ரிக் கார்களை கொண்டுவர வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளது. அதேபோன்று, லண்டனில் அதிக அளவில் காற்று மாசுவை உமிழும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்கும் மையங்களை நகரம் முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளனர்.

கட்டணம் வசூலிக்கும் அளவிற்கு லண்டன் மாநகராட்சி சென்றிருப்பதற்கு காரணம், இங்கிலாந்தில் மற்ற அனைத்து நகரங்களிலும் கார்கள் வெளியிடும் காற்று மாசுவை விட லண்டன் நகரில் வெளியிடப்படும் மாசுவின் அளவு அதிகப்படியாக இருப்பதுதான். கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, கார்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு வடிவிலான போக்குவரத்தை பயன்படுத்துவது சிறந்தது என மக்கள் மத்தியிலும் லண்டனில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வில் இந்தியாவிற்கே டஃப் கொடுக்கும் லண்டன்!

பெட்ரோல் & டீசல் கார்களுக்கு மாற்றாக சிஎன்ஜி கார்கள் மற்றும் ஹைட்ரஜனால் இயங்கக்கூடிய கார்கள் கொண்டுவரப்பட்டாலும், எலக்ட்ரிக் வாகனங்களே நமது எதிர்காலம். தற்சமயம் உள்ள பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை பயன்படுத்தி கொண்டு, அதிலிலும் சிறிது லாபமும், வியாபாரத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியாகவே சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆதலால், இத்தகைய வாகனங்கள் தற்காலிகமானவை என்றுதான் சொல்ல வேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களை நீண்ட நேரம் சார்ஜ் செய்யும் ஸ்லோ சார்ஜரில் சார்ஜ் செய்தால் ரன்னிங் காஸ்ட்டை வருடத்திற்கு பாதியாக குறைக்கலாம். விரைவாக சார்ஜ் நிரப்பிவிடும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை உபயோகப்படுத்தினால் கூட ரன்னிங் காஸ்ட்டை வருடத்திற்கு ரூ.30,000- ரூ.40,000 வரையில் நிச்சயமாக குறைக்க முடியும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

Article Published On: Wednesday, February 15, 2023, 10:49 [IST]
English summary
Driving petrol car in london costs more than in any other city in the world after hong kong
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X