டிரைவிங் ஸ்கூலுக்கு பயன்படுத்த கூடிய காரா இது! வேற ஒரு காரு டிரைவர் வீடியோ எடுத்ததால தெரிய வந்திருக்கு!

டிரைவிங் ஸ்கூல்களில் பட்ஜெட் விலை கார்கள் பயன்படுத்தி வந்த காலம் மாறி தற்போது ஆடம்பர கார்களும் பயன்படுத்தும் சூழல் உருவாகி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியது. கடந்த வாரங்களுக்கு முன்னர் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) சொகுசு காரை ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்று பயன்படுத்திய நிகழ்வுதான் அது. ஓட்டுநர் பயிற்சியளிப்பதற்காகவே டிரைவிங் ஸ்கூல் இந்த காரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பலருக்கும்ம் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தது. ஓட்டுநர் பயிற்சி வாகனம் அது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக டிரைவிங் ஸ்கூல் போர்டு அதன் மேலே இடம் பெற்றிருந்தது.

இந்த சம்பவத்தின் அதிர்வலை ஓய்வதற்குள்ளாகவே மற்றுமொரு ஆச்சரியமான சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. மற்றுமொரு டிரைவிங் ஸ்கூல் பிஎம்டபிள்யூ எக்ஸ்3-யை போலவே மிகவும் அதிக விலைக் கொண்ட பிரீமியம் காரை பயன்படுத்தி வருவது தெரிய வந்திருக்கின்றது. 4X4 தொழில்நுட்ப வசதிக் கொண்ட மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரையே அந்த ஸ்கூல் பயன்படுத்தி வருகின்றது.

Driving school uses maruti jimny

இந்த நிகழ்வும் கேரளாவிலேயே அரங்கேறியிருக்கின்றது. முன்னதாக பார்த்த பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆடம்பர காரை கேரளாவைச் சேர்ந்த எஸ்எம்எஸ் எம்டிஎஸ் எனும் டிரைவிங் ஸ்கூலே பயன்படுத்தி வருகின்றது. இதைப்போலவே இதே கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஓட்டுநர் பயிற்சி பள்ளியே மாருதி சுஸுகி ஜிம்னி காரை பயன்படுத்தி வருகின்றது.

இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் எஸ்யூவி ரக கார் மாடலாக ஜிம்னி காட்சியளிக்கின்றது. ஆஃப்-ரோடு பயணங்களை அதிகம் விரும்புவோரின் பிரியமான கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கான பிரத்யேக சிறப்பம்சங்களை மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அவர்களின் மனம் கவர்ந்த காராக ஜிம்னி உள்ளது.

இத்தகைய காரையே கேரளாவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளி தங்கள் மாணவர்கள் வாகனங்களை ஓட்ட பழகுவற்காக பயன்படுத்தி வருகின்றது. பொதுவாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் ஆல்டோ, வேகன்ஆர் மற்றும் இன்டிகா போன்ற விலை குறைவான கார்களே பயன்படுத்தப்படும். இந்த நிலையே தற்போது மாற தொடங்கி இருக்கின்றது.

ஜிம்னி கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியால் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காரின் மேற்கூரையிலும் 'எல்' எழுத்துடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி போர்டு இடம் பெற்றிருக்கின்றது. பணக்கார வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த மாதிரியான பிரீமியம் கார்களை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

இதன் விளைவாகவே முன்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் ஆல்டோ மற்றும் வேகன்ஆர் போன்ற கார்கள் காட்சியளித்து வந்தநிலையில் தற்போது ஜிம்னி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற கார்களும் காட்சியளிக்கத் தொடங்கி இருக்கின்றன. இது அவர்களுக்கு வருவாயை கூட்டிக் கொடுக்க பெரும் உதவியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இத்துடன், வசதியான வாடிக்கையாளர்களையும் அவர்களால் கவர முடியும். இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டீசல் மோட்டார் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணக்காரர்களை மட்டுமல்ல விலை உயர்ந்த காரில் ஓட்டுநர் பயிற்சி பழக வேண்டும் என்பது பலரின் கனவாகவும் இருக்கின்றது. அத்தகைய வாடிக்கையாளர்களையும் கவரும் நோக்கிலேயே கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அதிக அளவில் பிரீமியம் மற்றும் சொகுசு கார்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, January 6, 2025, 11:18 [IST]
English summary
Driving school adopted maruti jimny 4x4 to enhance student driving skills
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+