கேரளா கேரளாதான்யா! எவ்ளோ செலவு ஆனாலும் பரவால இவங்க கிட்ட சேந்தே ஆகணும்! சொல்லி தர்ற விதமே ஒரு ரகமா இருக்கு!

இன்று கார் டிரைவிங்கில் மாஸ் காட்டி கொண்டிருக்கும் பலருக்கும், டிரைவிங் ஸ்கூல்கள்தான் அடிப்படையாக இருந்திருக்கும். அங்குதான் எப்படி கார் ஓட்ட வேண்டும்? என்பதை அவர்கள் கற்று கொண்டிருப்பார்கள். இந்தியாவின் டிரைவிங் ஸ்கூல்களில் பயன்படுத்தப்படும் கார்களை கவனித்தால், 2 விஷயங்கள் பொதுவாக இருக்கும். ஒன்று மிகவும் விலை குறைவான கார்களில்தான் அவர்கள் டிரைவிங் சொல்லி கொடுப்பார்கள். இரண்டாவதாக, டிரைவிங் கற்று கொடுக்க பயன்படுத்தப்படும் கார்கள் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டவையாக இருக்கும். இந்தியாவின் பெரும்பாலான டிரைவிங் ஸ்கூல்களில் இதுதான் நிலைமை.

டிரைவிங் ஸ்கூல்கள் இந்த 2 விஷயங்களையும் பின்பற்றுவதற்கு பின்னால் 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. விலை குறைவு, ஒருவேளை சாலை விபத்தில் சிக்கினால் சரி செய்வதற்கான செலவு குறைவு ஆகிய காரணங்களால்தான், விலை குறைவான கார்களில் அவர்கள் டிரைவிங் கற்று கொடுக்கிறார்கள்.

Driving School Uses A BMW X3 Luxury SUV For Teaching

இரண்டாவதாக மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை அவர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால், இந்தியாவில் பெரும்பாலும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களில் டிரைவிங் பழகி கொள்வதைதான் பலரும் விரும்புகின்றனர். டிரைவிங் ஸ்கூல்களுக்கு சென்ற பலரும், விலை குறைவான மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களில்தான் டிரைவிங் பழகியிருப்பார்கள்.

ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் டிரைவிங் ஸ்கூல் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் டிரைவிங் கற்று கொடுக்க பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) காரை பயன்படுத்துவதுதான் இதற்கு காரணம். இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

அத்துடன் இது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார், டிரைவிங் கற்று கொடுக்க பயன்படுத்தப்பட்டு வரும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு, நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் ஆரம்ப விலையே 68.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 87.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் சம்பந்தப்பட்ட டிரைவிங் ஸ்கூல் இவ்வளவு விலை கொடுத்து புதிய காரை வாங்கியிருக்குமா? என்பது சந்தேகம்தான். அனேகமாக அவர் யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காரை வாங்கியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். தற்போதெல்லாம் யூஸ்டு கார் மார்க்கெட்டில், சொகுசு கார்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

எனவே அவர்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டில், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரை வாங்கியிருக்கலாம். இது நல்ல விளம்பர யுக்தியாக அவர்கள் கருதியிருக்கலாம். ஆம், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 போன்ற ஒரு காரில், டிரைவிங் கற்று கொடுப்பது என்பது, உண்மையிலேயே நல்ல விளம்பர யுக்திதான். இது நிச்சயமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

இந்த திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதன் காரணமாகவே திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரைவிங் ஸ்கூலை பற்றி, நாம் தற்போது பேசி கொண்டுள்ளோம். இரண்டாவதாக அவர்கள் ஆட்டோமேட்டிக் காரை தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் விற்பனை உயர்ந்து வருகிறது.

எனவே ஆட்டோமேட்டிக் கார்களில் டிரைவிங் பழகி கொள்வது நல்லது என்று பலரும் நினைக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆட்டோமேட்டிக் காரை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். சொகுசு கார்களில் டிரைவிங் கற்று கொடுக்கும் இந்த யுக்தியை, வரும் காலங்களில், நிறைய டிரைவிங் ஸ்கூல்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 18:39 [IST]
English summary
Driving school uses a bmw x3 luxury suv for teaching viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+