கூகுள் கிளாஸ் அணிந்து கார் ஓட்டுவது விபத்துக்கு வழிகோலும்: ஆய்வில் தகவல்

மொபைல்போன்கள் போன்றே கூகுள் கிளாஸ் அணிந்து கார் ஓட்டும்போது கவனக்குறைவு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கு கண்ணாடி போன்று அணிந்து கொள்ளக்கூடிய கூகுள் கிளாஸ் மூலம் ஏராளமான வசதிகளை பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. வாய்மொழி உத்தரவுகள் மூலம் தகவல் பரிமாற்றம், கூகுள் தேடல் மூலம் தகவல்களை பெறுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும். இ- மெயில்களை கூட வாய்மொழி உத்தரவு வசதி மூலம் அனுப்ப முடியும்.

Google Glass Danger

இதன்மூலம் கார் ஓட்டுபவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் நேவிகேஷன் தகவல்களை பெற முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது. சமீபத்தில் துபாயில் காரில் ரோந்து செல்லும் போலீசாருக்கு விசேஷ கூகுள் கிளாஸ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்து. ஆனால், கூகுள் கிளாஸ் அணிந்து கார் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

"பிரேக் பிடிக்கும் வேகம், போக்குவரத்து நிலைகளில் எதிர்பாராத தருணங்களின்போது ஓட்டுனர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும்போது மொபைல்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கூகுள் கிளாஸ் அணிந்து ஓட்டுபவர்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை காணமுடியவில்லை," என்று மத்திய ப்ளோரிடா பல்கலைகழக மனநல ஆய்வாளர் பென் சாயர் தெரிவித்துள்ளார்.

சாலையை பார்த்து ஓட்டுவதால் மட்டுமே முழு கவனம் இருப்பதாக கருத முடியாது. கண்கள் சாலை மீது இருந்தாலும், மூளையின் கவனம் வேறொரு விஷயத்தில் மூழ்கிவிடும் என்றும் பென் சாயர் கூறியுள்ளார்.

கூகுள் கிளாஸ் மற்றும் மொபைல்போன் அணிந்தவர்களை சிமுலேட்டரில் கார் ஓட்டிக்கொண்டே எண்கணித கணக்குகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின்போது, திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய தருணத்தில் ஒவ்வொருவரின் தன்னம்பிக்கையும், செயல்திறனிலும் வித்தியாசம் இருந்ததாக பென் சாயர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூகுள் கிளாஸ் அணிந்து ஓட்டும்போது வலது பக்கத்தில் கண்ணுக்கு தெரியாத பகுதியின் எல்லை அதிகமாக இருப்பதாகவும், இதனால் விபத்துக்கள் நடைபெறுவதற்கு வழிகோலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வெளிச்சம் குறைவான நேரத்திலும் கூகுள் கிளாஸ் அணிந்து ஓட்டும்போது பிரச்னை ஏற்படும் என்றும், பாதசாரிகளுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 7, 2014, 15:15 [IST]
English summary
According to a recent study, wearing a Google Glass and using it while driving is as distracting as using a mobile phone while driving.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+