உடனடி மருத்துவ சிகிச்சைக்கு வழிகோலும் குட்டி விமான ஆம்புலன்ஸ்...!!

By Saravana

பீட்சா டெலிவிரி, கொரியர் டெலிவிரி, உளவு பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ட்ரோன் எனப்படும் ஆள் இல்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அவசர சமயங்களில் உயிர்காக்கும் பணிக்கான புதிய ஆள் இல்லாமல் இயங்கும் குட்டி விமான ஆம்புலன்ஸ் கான்செப்ட்டை அமெரிக்காவை சேர்ந்த ஏரோடிசைன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

விபத்தில் சிக்கி பாதிப்படைவோருக்கு மிக குறுகிய நேரத்தில் காப்பாற்றுவதற்கான கான்செப்ட்டாக இதனை உருவாக்கி இருக்கின்றனர். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இடர்பாடுகள்

இடர்பாடுகள்

விபத்து சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தரைவழியாக ஆம்புலன்ஸ் சென்றடைய அதிக நேரமெடுக்கிறது. இதேபோன்று, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தரை இறக்குவதற்கும் முன்னேற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவை. ஆனால், அதற்குள் விபத்தில் பாதிக்கப்படுவோர்க்கு குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.

தரையிறக்குவது எளிது

தரையிறக்குவது எளிது

இந்த புதிய ஆள் இல்லா குட்டி விமான ஆம்புலன்ஸை எந்தவொரு இடத்திலும் எளிதாக தரை இறக்கலாம். மேலும், ஓட்டுனர் தேவையில்லை என்பதால், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு அனுப்ப முடியும். மோசமான வானிலை, எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட இதனை எளிதாக அனுப்பி பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனைக்கு குறைந்த நேரத்தில் அழைத்து வர முடியும். இது சிறிய கார் அளவு வடிவம் கொண்டதாக இருக்கும்.

உரிய நேரத்தில் சிகிச்சை

உரிய நேரத்தில் சிகிச்சை

இந்த ட்ரோன் ஆம்புலன்ஸில் இருக்கும் ஸ்ட்ரெச்சரில் பாதிக்கப்பட்டவரை மீட்டு, மருத்துவமனைக்கு சில நிமிடங்களில் அழைத்து வந்துவிட முடியும். இதனால், மிக குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கும்.

இதர மருத்துவ உதவிகள்

இதர மருத்துவ உதவிகள்

விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி, மாரடைப்பு மற்றும் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவோரையும், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரையும் மிக விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கான மிகச்சிறந்த போக்குவரத்து சாதனமாக இது இருக்கும் என ஏரோடிசைன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Most Read Articles
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary

 Agrodesign, a company that usually works in partnership with software companies has decided to venture into life saving services by designing a drone ambulance concept.
Story first published: Wednesday, February 18, 2015, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X