கைவிடப்பட்ட வாகனங்களுடன் மர்ம தேசமாக மாறிய புகுஷிமா பகுதி!

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும், அதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலைகளும் தாக்கின. இந்த கடும் இயற்கை சீற்றத்தால், அங்கு பெரும் பேரழிவுகள் ஏற்பட்டன.

மேலும், புகுஷிமாவில் இருந்த அணு உலை பூகம்பத்தால், கடும் சேதமடைந்து, அதிலிருந்து அணுக்கதிர் வீச்சு வெளியேறத் துவங்கியது. இதனால், அந்த பகுதியிலிருந்தவர்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

இந்த நிலையில், அந்த பகுதியை ஆள் இல்லா விமானம் மூலமாக வானிலிருந்து படம் பிடித்திருக்கின்றனர். மேலும், சிலர் அனுமதி பெற்று சமீபத்தில், அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டிருக்கின்றனற். சில ஆண்டுகளுக்கு முன் மனித வாழ்விடங்களாக இருந்த அந்த பகுதிகள், தற்போது வனாந்திரமாக மாறி கிடக்கிறது.

புரட்டிப்போட்ட பூகம்பம்

புரட்டிப்போட்ட பூகம்பம்

புகுஷிமா அணு உலைக்கு அருகில் வசித்த 1.60 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

© Arkadiusz Podniesinski/REX/SIPA

வாகனக் கூட்டம்

வாகனக் கூட்டம்

புகுஷிமா அணு உலையில் அணு உலையிலிருந்து, அபாயகரமான அளவில் அணுக் கதிர் வீச்சு வெளியேறியதால், தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்திவிட்டு, பலர் வெளியேறிவிட்டனர்.

© Arkadiusz Podniesinski/REX/SIPA

Recommended Video

Do Airplanes Have A Reverse Gear? - DriveSpark
 வனாந்திரம்...

வனாந்திரம்...

போக்குவரத்து அடியோடு அற்றுப் போன அந்த சாலைகளில் செடிகளும், புதர்களும் மண்டியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களையும் சூழ்ந்துவிட்டது.

© Arkadiusz Podniesinski/REX/SIPA

அந்திம காலம்

அந்திம காலம்

கைவிடப்பட்ட பைக் ஒன்று செடிகளின் அரவணைப்பில் தனது அந்திம காலத்தை கழிக்கிறது.

© Arkadiusz Podniesinski/REX/SIPA

வாகன நிறுத்துமிடம்

வாகன நிறுத்துமிடம்

புகுஷிமா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மிதி வண்டிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அனாதையாக நிற்கின்றன.

© Arkadiusz Podniesinski/REX/SIPA

பெரும் அழிவு

பெரும் அழிவு

வீணாக செலவழிக்கப்படும் மின்சாரத்தை தடுப்பதற்கும், சிக்கனப்படுத்துவதற்கான முயற்சிகளை அராசங்கமும், மின் சிக்கனத்தை முயற்சிகளை தனிநபரும் கடைபிடித்தாலே, மின் பற்றாக்குறை வெகுவாக குறையும். இதுபோன்று மனித குலத்துக்கு பெரும் அழிவு தரும் அணு உலைகளின் தேவைும் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.

Source: Linternaute

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Amazing images reveal how the exclusion zone around Fukushima.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X