குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

குடிபோதையில் இருந்தால் காவல் துறையினரை அழைக்கலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

2021ம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கின்றன. 2022ம் ஆண்டை வரவேற்பதற்கு உலகம் உற்சாகமாக தயாராகி வருகிறது. நியூசிலாந்து நேரப்படி ஏற்கனவே புத்தாண்டு பிறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக புத்தாண்டிற்கு முந்தைய தினம் இரவு உலக நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஆங்கில புத்தாண்டிற்கு முந்தைய தினம் இரவு, அதாவது டிசம்பர் 31ம் தேதி, வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டே மற்றவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம்.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

இந்த சமயத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் பலர் மது அருந்தியிருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது ஒமிக்ரான் பரவல் அச்சம் உள்ளதால், இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

அதேபோல் சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிபோதையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக காவல் துறையினர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

இதுதொடர்பாக அஸ்ஸாம் மாநில காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''அஸ்ஸாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே இன்று இரவு (டிசம்பர் 31) புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

குடிபோதையில் யாரும் வாகனங்களை ஓட்ட வேண்டாம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுனர்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களையும், அவர்களுடன் இருக்கும் நபர்களையும் தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை எங்கள் விருந்தினர்களாக வைத்திருக்க போகிறோம்'' என்றனர்.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டி யாரும் அரசாங்க விருந்தினர்களாக இருக்க வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் வேடிக்கையாக எச்சரித்துள்ளனர். இதற்கிடையே குடிபோதையில் தள்ளாடுபவர்களை அவரவர் வீடுகளில் சேர்ப்பதற்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

இதற்காக ஹெல்ப்லைன் எண்களும், வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 31ம் தேதி (இன்று) இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். குடிபோதையில் உள்ளவர்கள் தங்களால் மற்றவர்களுக்கு ஆபத்து நேரலாம் என கருதினால், இந்த ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

அவர்கள் தங்களை வீட்டில் விட்டுவிடும்படி கோரலாம். சாலை விபத்துக்களை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி நகரில் கடந்த டிசம்பர் 29ம் தேதி இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 64 பேர் சிக்கியுள்ளனர்.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் ஓட்டுனர் உரிமங்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இன்றைய தினம் இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

குடிபோதையில் இருந்தால் போலீசுக்கு போன் செய்யலாம்... வீட்லயே கொண்டு வந்து விட்றுவாங்க... இது நல்லா இருக்கே!

அஸ்ஸாம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. புத்தாண்டு தினத்தன்று மட்டுமல்லாது, அனைத்து நாட்களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலாம். இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், பாதசாரிகளுக்கும், உங்களுடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் நன்மை பயக்கும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drop home facility for boozers in assam check details here
Story first published: Friday, December 31, 2021, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X