ஆடி காருக்கும் ஆம்புலன்ஸிற்கும் வித்தியாசம் தெரியாத குடிபோதை தொழிலபதிபர்... நள்ளிரவில் தள்ளாட்டம்..!

ஆடி காருக்கும் ஆம்புலன்ஸிற்கும் வித்தியாசம் தெரியாத குடிபோதை தொழிலபதிபர்... நள்ளிரவில் தள்ளாட்டம்..!!

காலையில் ஆடி காரில் சென்ற தொழிலதிபர் ஒருவர், நள்ளிரவில் ஆம்புலன்ஸில் வீடு திரும்பிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயதான மித்தல், தொழிலதிபராக உள்ளார். ஞாயிறன்று தனது பெண் தோழியுடன் ஒரு பார்ட்டிக்கு அவர் சென்றிருந்தார்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

அங்கு தனது பெண் தோழிக்கு காயம் ஏற்படவே, அவரை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

மித்தல் மற்றும் அவரது பெண் தோழி இருவரும் போதையில் இருந்ததால், அந்த மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க அனுமதிக்க மறுத்துவிட்டது.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

இந்நிலையில், தான் ஓட்டி வந்த ஆடிக்காருக்கு பதிலாக, மருத்துவமனை ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பெண் தோழியை கூட்டி சென்றார் மித்தல்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

அங்கு சிகிச்சை பெற தோழியை அனுமதித்துவிட்டு, நள்ளிரவு 2 மணியளவில் ஆயிரம் விளக்கு மருத்துவமனை ஆம்புலன்ஸிலேயே வீடு வந்து சேர்ந்தார் அவர்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

இதற்கிடையில் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸைக் காணவில்லை என்று நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

ஆம்புலன்ஸை காவல்துறையினர் தேடத்தொடங்கிய நிலையில், தேனாம்பேட்டை மருத்துவமனைக்கு காணாமல் போன ஆம்புலன்ஸை ஒருவர் கொண்டு வந்துவிட்டார்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, குடிபோதையில் இருந்த தனது முதலாளி ஆடி காருக்கு பதிலாக மருத்துவமனை ஆம்புலன்ஸை வீட்டுக்கு ஓட்டிவந்ததாக அவர் தெரிவித்தார்.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

மேலும் அந்த ஆம்புலன்ஸில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதைக்குறித்து போலீஸார் கேள்வி எழுப்பிய போது, அதை தானே சரிசெய்து கொடுத்துவிடுவதாக கூறினார்.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

தேனாம்பேட்டை காவல்துறை இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்கையில் நள்ளிரவில் குடிபோதையில் இருந்த தொழிலதிபர் மித்தல் செய்த குளறுபடிகள் தெரியவந்தன.

ஆடி காரை விட்டு ஆம்புலன்ஸில் வீடுவந்த குடிபோதை தொழிலதிபர்..!!

இருந்தாலும் ஆம்புலன்ஸை திருடி சென்றதாகவும், குடிபோதையில் கார் ஓட்டியதற்காகவும் பாலவாக்கம் தொழிலதிபர் மீது தேனாம்பேட்டை காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe to DriveSpark Tamil YouTube Channel - Click Here

Article Published On: Tuesday, December 19, 2017, 12:28 [IST]
English summary
Read in Tamil: Drunk Business Man Drives Ambulance Home Instead of His Audi Car. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+