பொது இடத்தில் புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

Written By:

டெல்லியில், மருத்துவமனை வளாகம் அருகே புகைப்பிடித்தவரை தட்டிக் கேட்ட வாலிபர் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

டெல்லியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்[21]. இவர் புகைப்பட கலை துறை படிப்பை பயின்று வருகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனை வரும்போது படும் அவஸ்தைகள் மற்றும் அங்கு இருக்கும்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஒரு ஆவணப் படம் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு தனது நண்பர் மணீந்தர் சிங்குடன் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் சிகரெட் பிடித்தபடி நின்றிருக்கிறார். அவர் விட்ட சிகரெட் புகை இவர்களது முகத்தில் தொடர்ந்து பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரிடம் பொது இடத்தில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று குர்ப்ரீத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் குடிபோதையில் இருந்ததால், குர்ப்ரீத் சொன்னதை கேட்டாமல் தொடர்ந்து புகை விட்டபடி இருந்துள்ளார்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இதனால், அவரிடம் சற்று கடுமையாக புகை பிடிப்பதை நிறுத்துமாறு குர்ப்ரீத் சிங் கூறியதாக தெரிகிறது. புகைப்பிடித்தவர் குடிபோதையில் இருந்ததாலும், கடுமையாக பேசியதாலும், அந்த இடத்தை விட்டு குர்ப்ரீத் சிங்கும், அவரது நண்பர் மணீந்தர் சிங்கும் நகர்ந்துள்ளனர்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

மேலும், தங்களது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, புகைப்பிடித்தவர் தனது ஃபோர்டு காரில் அவர்களை தொடர்ந்து விரட்டி வந்ததுள்ளார். மேலும், அதிவேகத்தில் வந்து இருவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த குர்ப்ரீத் சிங்கும், மணீந்தரும் படுகாயமடைந்தனர். மேலும், அப்போது அவ்வழியாக சென்ற ஓலா வாடகை கார் மற்றும் வாகனங்கள் மீது அந்த ஃபோர்டு ஃபிகோ கார் மோதி இருக்கிறது.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயமடைந்த குர்ப்ரீத் சிங் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் அமர்ந்திருந்த மணீந்தர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இதுகுறித்து ஓலா கார் ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ரோஹித் கிருஷ்ணா மஹந்தா என்று தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்ததும் உறுதியானது.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இவர் அஸ்ஸாம் அரசு துறை ஒன்றில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில், கோமா நிலையில் இருந்த குர்ப்ரீத் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்!

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மஹந்தா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Hindustan Times

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Drunk Lawyer Runs Over 21-Year-Old Motorcyclist In Delhi.
Story first published: Friday, September 22, 2017, 11:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark