வேற எங்கயோ செய்ய வேண்டியதை காருக்கு மேலே செய்த போதை ஆசாமி! கூட ஃப்ரெண்ட்ஸ் வேற! வீடியோவை பாக்க முடியல!

இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுள்ள ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாகவே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறி கொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

ஆனாலும் ஒரு சிலர் இதனை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், வாகனங்களில் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொண்டே இருக்கின்றனர். பைக் ஓடி கொண்டிருக்கும்போதே முத்தம் கொடுத்து கொள்வது, பொது சாலைகளில் பைக் மற்றும் கார் ஸ்டண்ட்களில் ஈடுபடுவது என சமீப காலமாக நடந்து வரும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

Drunk Man Doing Push-ups On Top Of Moving Car

இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் காரின் மேற்கூரையில் படுத்து கொண்டு ஒருவர் புஷ்-அப் எடுத்துள்ளார். சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக (Viral Video) பரவி கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரின் மேற்கூரையில் படுத்து கொண்டு, ஒருவர் புஷ்-அப் எடுப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அதே சமயம் அவரது நண்பர்கள் என கூறப்படும் சிலர், அந்த காரில் தொங்கி கொண்டே வருகின்றனர். அவர்கள் குடிபோதையில்தான் இந்த அபாயகரமான காரியத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், காவல் துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் பேரில், காவல் துறை அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட நபர்களுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்று நடந்து கொள்பவர்களுக்கு இந்த அபராதம் எல்லாம் போதாது என்பதே நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த காரியத்தில் ஈடுபட்ட நபர்கள், தங்கள் உயிரை மட்டும் பணயம் வைக்கவில்லை. கூடவே சாலையில் பயணம் செய்யக்கூடிய மற்ற நபர்களின் உயிர்களையும் சேர்த்தே பணயம் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சமயங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவில்லை. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, காவல் துறை அதிகாரிகள் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் மேற்கூரை என்பது, புஷ்-அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதற்கான இடம் அல்ல. இதை வீடுகளிலோ அல்லது உடற்பயிற்சி கூடங்களிலோதான் செய்ய வேண்டும். இதுபோன்ற அபத்தங்களை ஊக்குவிக்காமல், காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 23:59 [IST]
English summary
Drunk man doing push ups on top of moving maruti alto viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+