சாமி படம் விக்ரம்னு தன்னை நினைச்சுக்கிட்டாரு போல இந்த நபர்.. பீரில் குளித்தவரோட இப்போதைய நிலைமை என்ன தெரியுமா?
மது பிரியர்கள், வெயிலின் தாக்கத்தைப் போக்க ஒரு பீர் கிடைக்காத, குறிப்பாக, கூலிங்காக கிடைக்காத என கடைக் கடையாக அலைந்துக் கொண்டிக்கும் இந்த வேளையில், ஒரு நபர் குளிர்ச்சியான பீரைக் கொண்டு குளித்திருக்கின்றார். இந்த நபரின் இப்போதைய நிலைமை மிகவும் மோசமானதாக மாறி இருக்கின்றது. அப்படி அவருக்கு என்னவானது என்பதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில் வந்த போதை ஆசாமி ஒருவர் தற்போது காவலர்களால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். போதை தலைக்கு ஏறிய நிலையில் அந்த நபர் பீரில் குளித்திருக்கின்றார். குடித்து வாகனத்தை ஓட்டுவதே மிகப் பெரிய குற்றச் செயல் ஆகும்.

ஆனால், இந்த நபர்களோ குடித்து வாகனத்தை ஓட்டு வந்ததோடு, அவர்கள் வாகனத்தின் மீது ஏறி 'ரோடு ஷோ' போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். குறிப்பாக, வாகனத்தின் மீது இளைஞர்கள் இருவர் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு பந்தா காட்டியிருக்கின்றனர். அது தவிர, பீர் மதுபானத்தைக் கொண்டு ஓர் இளைஞர் குளிக்கவும் செய்திருக்கின்றார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்த காரின் உரிமையாளர் மற்றும் காரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளைஞர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வு உபி-யிலேயே அரங்கேறியிருக்கின்றது. மேலும், இந்த கசப்பான செயலைச் செய்த இளைஞர்கள் பாஜக கட்சியில் செல்வாக்கு மிக்கவர்கள் என கூறப்படுகின்றது.

வாகனத்திலும் பாஜாக அடையாளங்கள் இருப்பதைக் காண முடிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே குடித்துவிட்டு மதுபோதையில் பொதுவேளையில் அறுவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்ட இளைஞர்களை உபி காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இளைஞர்களைக் கைது செய்த கையோடு அவர்கள் பயன்படுத்திய ஹூண்டாய் ஐ20 காரும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஐ20-யும் ஒன்றாகும். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே 8.44 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இத்தகைய காஸ்ட்லியான காரையே மதுபோதையால் செய்த தவறின் காரணமாக தற்போது பாஜகவைச் சேர்ந்த இளைஞர்கள் இழந்திருக்கின்றனர். மது போதையின் உச்சத்தில் இளைஞர்கள் இருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையில் வாகனத்தை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. அவர்களுக்கு மட்டுமல்ல சாலையில் வரும் மற்றவர்களுக்கும் அது மிகப் பெரிய ஆபத்தான சூழலை ஏற்படுத்தும்.
எனவேதான் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அந்தவகையிலேயே ஹூண்டாய் ஐ20 காரின் உரிமையாளர் மீதும், அதில் வந்தவர்கள் மீதும் மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. மற்றவர்கள் யாரும் இதுபோன்று விதிமீறல் செயலில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இந்தியாவில் இதுபோன்ற வாகன ஓட்டிகள் வாகனத்தின் மேற்கூரை மீது ஏறி டான்ஸ் ஆடுவது அல்லது கத்தி கூச்சிலிடுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக இதுபோன்ற சம்பவங்கள் பல நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. அதன் வரிசையிலேயே இந்த சம்பவம் புதிதாக இணைந்திருக்கின்றது.
குறிப்பாக, இளைஞர் மதுவால் குளித்ததால் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மது எளிதில் தீ பற்றக் கூடியது. சிறிய நெருப்பு பொறிகூட மிகப் பெரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆபத்தான செயலை செய்ததும் அவர்களின் கைதுக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது மிகப் பெரிய குற்றமாகும். நாட்டில் அரங்கேறும் நிறைய விபத்துக்களுக்கு பின்னால் டிரிங்க் அண்ட் டிரைவே காரணமாக உள்ளது. இதனால்தான் இந்த விதிமீறலுக்கு எந்த விதிவிலக்கும் இல்லாமல் உச்சபட்ச அபராதத்தை காவல்துறை வழங்கிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








