போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

போதையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மாயவதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமானதாக மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதே முதன்மை இடத்தில் இருக்கின்றது.

இதனை தவிர்க்கும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பனும், வாகன ஓட்டிகள் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் எத்தகைய பின் விளைவு சந்திக்கக் கூடும் என்பதனை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்று புதிதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

ஆனால், இதனை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்ற மூன்று இளைஞர்கள் மிகப் பெரிய விபத்தைச் சந்தித்தனர். இந்த விபத்துகுறித்த காட்சிகள் பார்ப்பதற்கு மாயாஜாலத்தைப் போன்று காட்சியளிக்கின்றது.

பைக்கில் சென்ற மூவரும் திடீரென விபத்துக்குள்ளான சில நொடிகளிலேயே மாயவதைப் போல் அங்கிருந்து தூக்கி வீசப்படுகின்றனர். இதுகுறித்த வீடியோவை ஷாந்தோனில் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

அந்த வீடியோவில், மிதமான வேகத்தில் செல்லும் அந்த பைக்கில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். அவர்கள், எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாவது வல பக்க பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு பின்னே வேகமாக வந்த கார்கள் ஒலி எழுப்பி அவர்களை ஒதுங்கச் செய்துவிட்டு ஓவர் செய்தன. இவ்வாறு, தொடர்ச்சியாக மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அவர்களை ஓவர்டேக் செய்து கடந்தன.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

இதனால், சாலையின் இடப்பக்க பாதைக்கும், நடு பாதைக்கும் இங்கும் அங்குமாக மாறி சென்ற அந்த இளைஞர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமாறு திரும்பினார்கள். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் நேரடியாக பாதையை பிரிக்கும் டிவைடர் மீது மோதியது.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

இந்த விபத்தில், பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் எதிர்பக்க சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்து சரியாக நல்லிரவில் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக அப்போது வேறெந்த வாகனமும் வராத காரணத்தால் அந்த பைக் மற்ற எந்த வாகனம் மீதும் மோதாமல் மீண்டும் சாலையின் மறுபக்க டிவைடர்மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மற்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து, அவர்களை மீட்ட சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

இந்த சம்பவம் அனைத்தையும் பைக்கின் பின்னால் காரில் வந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போன் மூலம் பதிவு செய்திருந்தனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர்கள்தான், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகும் வீடியோ..!

பெரும்பாலும், இதுபோன்று மதுபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காகவே போலீஸார் இரவு, பகல் பாரமால் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களை ஏமாற்றிச் செல்லும் பலர் இதுபோன்று விபத்துகளைச் சந்தித்து பெரும் பின்விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2019, 16:57 [IST]
English summary
Drunk Triple Riding Bikers Met Accident Near Faridabad. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+