நடுவானில் விமானத்தின் கதவை திடீரென திறந்த பயணி... போதை தலைக்கேறியதால் நடந்த விபரீதம் இதுதான்...

போதை தலைக்கேறிய பயணி ஒருவர், நடுவானில் விமானத்தின் கதவை திடீரென திறக்க முயன்றார். இதனால் ஏற்பட்ட விபரீதம் தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Most Read Articles
நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

விமான பயணம் என்பது ஒரு காலத்தில் சுகமானதாக இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. விமான பயணங்களின்போது ஒரு சில பயணிகள், நிறவெறியை தூண்டும் வகையில் பேசுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இன்னும் சில பயணிகள் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். இது உடன் பயணம் செய்து கொண்டிருக்கும் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதுபோன்ற காரணங்களால் ஒரு சில பயணிகள், விமான பயணங்களையே வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டனர். இந்த சூழலில் கனடாவை சேர்ந்த வெஸ்ட்ஜெட் (WestJet) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டேவிட் ஸ்டீபன் யங். கனடாவின் கால்கேரி நகரில் இருந்து இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த வெஸ்ட்ஜெட் நிறுவன விமானத்தில், டேவிட் ஸ்டீபன் யங் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் செய்தார்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டேவிட் ஸ்டீபன் யங் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். இதன் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே டேவிட் ஸ்டீபன் யங் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதனால் ஏற்பட்ட போதையில், விமானத்தின் பயணிகளிடம் டேவிட் ஸ்டீபன் யங் ரகளையில் ஈடுபட்டார். அப்போது கால்கேரி நகரில் இருந்து லண்டன் நோக்கி விமானம் கிளம்பியிருந்தது. இதன்பின்பாக விமானத்தின் ஊழியர்களிடமும் டேவிட் ஸ்டீபன் யங் ரகளை செய்தார்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அப்போது விமானத்தின் கதவுகளை திறக்கவும் அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கால்கேரி நகருக்கே பைலட்கள் விமானத்தை அவசர அவசரமாக திருப்பினர்.

MOST READ: மாருதி சியாஸ் கொடுத்த அடி... புதிய சிட்டி காரை களமிறக்கும் ஹோண்டா!

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

டேவிட் ஸ்டீபன் யங் ரகளை செய்ததன் காரணமாகவே, மீண்டும் கால்கேரி நகருக்கு விமானத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் பைலட்களுக்கு ஏற்பட்டது. இதன்பின்பு கால்கேரி நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே டேவிட் ஸ்டீபன் யங் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

விமானத்தில் பறக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததாலும், இதர பயணிகளை அச்சுறுத்தியதாலும்தான் டேவிட் ஸ்டீபன் யங் கைது செய்யப்பட்டார். அத்துடன் விமானம் மீண்டும் கால்கேரி நகருக்கு திரும்பியதால், எரிபொருள் வேறு வீணாக செலவாகியிருந்தது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இவை அனைத்திற்கும் சேர்த்து டேவிட் ஸ்டீபன் யங்கிற்கு தற்போது இந்திய மதிப்பில் சுமார் 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!!! தற்போது இவ்வளவு பெரிய தொகையை செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு டேவிட் ஸ்டீபன் யங் ஆளாகியுள்ளார்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அபராத தொகையை வெஸ்ட்ஜெட் நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. டேவிட் ஸ்டீபன் யங்கிற்கு நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை நியாயமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஏனெனில் தனி நபர் ஒருவரின் மோசமான நடத்தையால், பயணிகளுடன் சேர்த்து வெஸ்ட்ஜெட் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தனது மோசமான செய்கைகளுக்கு டேவிட் ஸ்டீபன் யங் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் மன்னிப்பு கோரி என்ன செய்வது? 11 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமே...

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

டேவிட் ஸ்டீபன் யங் போன்ற நபர்களால்தான் தற்போது விமான பயணங்கள் கசப்பானதாக மாறியுள்ளன. சம்பவத்தன்று எத்தனை பேர் அவசரமாக செல்ல வேண்டியதிருந்திருக்கும். ஆனால் தனி நபர் ஒருவரின் மோசமான நடத்தையால், அவர்களுக்கும் தேவையில்லாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

எனவே விமானங்களில் பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு சங்கடம் ஏற்படாமல் நடந்து கொள்வது நல்லது. நீங்கள் பண்பட்ட பயணியாக நடந்து கொள்ளும்பட்சத்தில், விமான பயணம் அனைவருக்கும் இனிமையானதாக மாறும்.

MOST READ: '96' பட இயக்குனருக்கு விஜய் சேதுபதியின் பரிசு.. விலை உயர்ந்த இந்த பைக்கை வழங்கியதற்கு காரணம் இதுதான்

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

விமான நிறுவனங்கள் சில சமயங்களில் குறிப்பிட்ட இருக்கைகளை ப்ளாக் செய்து விடுகின்றன. அல்லது அடுத்தடுத்த இருக்கைகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே குடும்பமாக பயணம் செய்பவர்களால் சில சமயங்களில் அடுத்தடுத்த இருக்கைகளை பெற முடியாமல் போகிறது.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதன் காரணமாக அவர்கள் தனித்தனியே அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய சூழலில் நீங்கள் தனியாக பயணம் செய்தால், அவர்களுக்காக இருக்கையை மாற்றி கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் இந்த உதவியை அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஆனால் இத்தகைய நபர்களை பார்த்தால், தாமதம் செய்யாமல் உடனடியாக இருக்கையை மாற்றி கொள்ள தயாராக இருங்கள். ஏனெனில் விமானம் வானில் பறக்க தொடங்கிய பின்பு, இருக்கைகளை மாற்றினால் மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ரயில் பயணங்களை போன்று விமான பயணங்களிலும், மற்ற பயணிகளுடன் பேசி கொண்டே பொழுதை போக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் அத்தகைய நபர்களுடன் கவனமாக உரையாடுங்கள். அதேபோல் மிகவும் சப்தமாகவும் பேச வேண்டாம்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இது கேபினில் இருக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவை தரும். அதே சமயம் உங்களுக்கு பேசி கொண்டு செல்லும் பழக்கம் இருந்தால், மற்ற பயணிகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள். அவர்கள் உங்களுடன் ஐ கான்டாக்ட்டை (Eye Contact) தவிர்த்தால், அவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அவர்களுடன் மேற்கொண்டு பேசி அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். துர்நாற்றம் வீசக்கூடிய கெட்டு போன உணவு, திண்பண்டங்களை விமானத்தில் எடுத்து செல்லாதீர்கள். அதன் துர்நாற்றம் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

விமானத்தின் சேர் ஃப்ரேமின் (Chair Frame) அகலத்திற்குள்ளாக உங்கள் கால்களை வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கால்களை வீணாக வெளியே நீட்டி கொண்டிருந்தால், மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல்தான்.

MOST READ: கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... தாக்கியது யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணியால் விபரீதம்.. என்ன நடந்தது என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அதேபோல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அளவோடு மட்டும் மது அருந்துவது நல்லது. அளவை மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், அளவுக்கு அதிகமான போதை காரணமாக நிதானத்தை இழக்க நேரிட்டால், அதற்கு உண்டான கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

Note: Images for representative purpose only.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drunk WestJet Passenger Who Forces Plane To Land Ordered To Pay A Fine Of Rs.11 Lakhs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more