“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

குடிபோதையில் பெண் ஒருவர், வாகனங்களுக்கு இடையூறாக சாலையிலேயே படுத்து புரண்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இது தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

புனேவில் திலக் சாலையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பான கீழுள்ள வீடியோவில், பெண் ஒருவர் சாலையில் அமர்ந்தப்படியும், படுத்தப்படியும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நடந்து கொண்டுள்ளதை பார்க்கலாம்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

சாலையின் முக்கிய பகுதியில் இவ்வாறு அராஜகம் செய்துள்ள இந்த பெண் ஆல்கஹால் அருந்தி இருக்கலாம் என அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வீடியோவில் ஆடியோ இல்லை, ஆதலால் அந்த பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை.

பெண்ணின் உடல் மொழியை வைத்து பார்க்கும்போது அவர் ஒன்று, மது அருந்தி இருக்க வேண்டும், அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு பெண்மணி ஏன் இரவு 10.30 மணியளவில் இவ்வாறு சாலையை மறித்தப்படி அட்டூழியம் செய்ய வேண்டும்?

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

குடிப்போதையில் சாலையின் எங்காவது ஒரு மூலையில் படுத்திருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சாலையின் நடுவில் அமர்ந்து கொண்டு என் மீது காரை ஏற்றி செல்லுங்கள் என அந்த பெண் கூறியது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை மிகவும் பதற்றமடைய வைத்தது.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

புனேவில் அது மிகவும் பிஸியான சாலை என்பதால், இந்த குடிப்போதை பெண்ணால் சில நிமிடங்களிலேயே பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் சில நிமிடங்களிலேயே அந்த பகுதிக்கு விரைந்தனர்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

ஆனால் அதற்குள் அந்த பெண் அங்கிருந்து நழுவி சென்றுவிட்டார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த பெண் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? உண்மையில் மது அருந்திருந்தாரா? என அந்த பெண்ணை பற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதில் இல்லை.

அவராக சாலையில் வந்து அமர்ந்தார், புரண்டார். பின்பு போலீஸாரை அழைத்தது எவ்வாறு அவருக்கு தெரிந்தது என்பது தெரியவில்லை, போலீஸார் வருவதற்குள் அவராகவே அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த பெண் குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

இதுகுறித்து புனே, ஸ்வார்கேட் போலீஸ் நிலைய முதன்மை அதிகாரி கூறுகையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கடாக் பகுதியில் இருந்து இந்த பெண் ஹிராபாக் என்ற பகுதிக்கு வந்துள்ளார். வீடியோவில், அந்த பெண் சாலையில் சில நிமிடங்கள் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக நடந்து கொண்டதை பார்க்க முடிகிறது.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

எங்களுக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து அழைப்பு வந்ததை தொடர்ந்து எங்களது போலீஸ் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். ஆனால் அந்த பெண் அங்கில்லை என கூறியுள்ளார். இவ்வாறு போலீஸாருக்கே என்ன நடந்தது என்பது தெரியாததால், இந்த சம்பவம் மாயை மந்திரம் போன்றே அந்த பகுதியினருக்கு இருந்துள்ளது.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

அந்த பெண்ணை கண்டறிய முடியாததால் இவ்வாறு அவர் நடந்த கொண்டதற்கு காரணம் கடைசி வரையில் தெரியவில்லை. ஒருவேளை அவர் போலீஸாரிடம் சிக்கி இருந்தால், அவர்கள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு மது அருத்தியதால் இவர் இப்படி நடத்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதை கண்டறிந்திருப்பர்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

இதன்பின் அவர் அடையாளம் காணப்பட்டாலும் சட்டப்படி அவருக்கு தண்டனை வழங்கப்படும். ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை தெரிவித்தாலும் குறைந்தப்பட்சம் எச்சரிக்கப்படுவார் என போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

மறுபக்கம் அந்த பெண் சாலையில் அமர்ந்திருந்த போது சிலர் கைத்தட்டி அவர் போக்குவரத்தை நிறுத்துவதை ஊக்கப்படுத்துவது போல் நடந்து கொண்டதாக இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் யார்? பெண்ணின் நண்பர்களா? அல்லது குடும்பத்தினரா என்பதையும் போலீஸாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

“என் மீது காரை ஏற்றி செல்லுங்கள்”- குடிப்போதையில் பிஸியான சாலையில் அட்டூழியம் செய்த இளம்பெண்

ஆக மொத்தத்தில் புனே பகுதியில் இணையத்தில் தற்சமயம் வைரலாகும் வீடியோவாக இது விளங்குகிறது. இருப்பினும் இந்த ஒரு வீடியோவை வைத்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது எனவும், இதற்கு அவர் கூறும் காரணத்தை வைத்தே இந்த நிகழ்வின் தன்மை ஆராயப்படும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drunk woman lies down on road tries to block traffic
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X