அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

18,379 அடி உயரம் கொண்ட கர்டங் லா சிகரத்தின் உச்சியை, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மூலம், வெற்றிகரமாக எட்டிபிடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் ரியா யாதவ் என்ற கல்லூரி மாணவி...!

By Arun

உலகின் மிகவும் உயரமான 'மோட்டரபிள் பாஸ்' என அழைக்கப்படும் கர்டங் லா, லடாக்கில் அமைந்துள்ளது. 18,379 அடி (5,359 மீட்டர்) உயரம் கொண்ட இந்த சிகரத்தின் உச்சியை, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மூலம், வெற்றிகரமாக அடைந்து உலக சாதனை படைத்திருக்கிறார் ரியா யாதவ் என்ற கல்லூரி மாணவி. இதுபற்றிய சுவாரசியமான விஷயங்களையும், ரியா யாதவ்வின் போராட்டம் குறித்த தகவல்களையும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

இயற்கை அழகு கொஞ்சும் இமயமலை சாரல்

இமயமலை சாரலில் அமைந்துள்ள காஷ்மீர் மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சம் பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள லடாக்கில் அமையப்பெற்றிருக்கும் ஒரு இடம்தான் கர்டங் லா. இதன் உயரம் 18,379 அடி (5,359 மீட்டர்). இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான 'மோட்டரபிள் பாஸ்' என அழைக்கப்படுகிறது. பல தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, இந்த சிகரத்தின் உச்சியை எட்டியதன் மூலம், புதிய உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார் ரியா யாதவ்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

கல்லூரி மாணவி

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியை சேர்ந்தவர்தான் ரியா யாதவ். அங்குள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவருக்கு 19வது வயது பிறந்தது. இதற்காக பைக் ஒன்றை அவரது தந்தை பரிசளித்தார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

உலக சாதனை

அதுவரை பைக் ஓட்டுவதை பற்றி எல்லாம் அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் தந்தை பைக்கை பரிசளித்து வெறும் 7 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் கர்டங் லாவை எட்டிய உலகின் மிக குறைந்த வயதுடைய இளம்பெண் என்ற புதிய சரித்திரத்தை அவர் எழுதியிருக்கிறார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

பைக்குகளின் மீது அதீத காதல்

எப்படி பைக் ஓட்ட வேண்டும் என்பதை பற்றி ரியா யாதவுக்கு பெரிய அளவில் தெரியாது. ஆனால் பைக்குகளின் மீது பேரார்வமும், அதீத காதலும் கொண்டவர். இதை அவரது தந்தை அறிந்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே ரியா யாதவுக்கு பைக்கை பரிசளித்தார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

தீவிர பயிற்சி

இதன்பின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீம்ராணா மற்றும் நொய்டா எக்ஸ்பிரஸ் வே உள்ளிட்ட சாலைகளில் பைக்கை எடுத்து கொண்டு பறந்து விடுவார் ரியா யாதவ். உடன் தனது சகோதரரையும் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன்மூலம் அவருக்கு நல்ல பயிற்சி கிடைத்தது.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

பாய் பிரண்டு ஆன சகோதரர்...!

அப்போது ரியா யாதவின் சகோதரரை அவரது பாய் பிரண்ட் என சிலர் நினைத்து கொண்டனர். இது தொடர்பாக அவர்களது தாயிடம் புகாரும் செய்துள்ளனர். இதனால் ரியா யாதவ் மனம் உடைந்தாலும் பயிற்சியை கைவிடவில்லை.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

ஸ்கூட்டி மூலம் படைக்கப்பட்ட சாதனை தகர்க்கப்பட்டது

கர்டங் லா குறித்த தகவல்கள் பேஸ்புக் மூலமாகதான் ரியா யாதவுக்கு தெரியவந்துள்ளது. இதன்பின் கர்டங் லாவை எட்டிய மிக குறைந்த வயதுடைய இளம்பெண் என்ற சாதனையை கைவசம் வைத்திருந்த அனம் ஹசிம் குறித்த தகவல்களையும் ரியா யாதவ் அறிந்து கொண்டார். ஸ்கூட்டியின் மூலம் அனம் ஹசிம் அந்த சாதனையை படைக்கும்போது அவருக்கு வயது 20. அந்த சாதனையைதான் தற்போது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மூலம் ரியா யாதவ் தகர்த்து எறிந்திருக்கிறார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

ரிஸ்க் டிரிப்

இந்த ரிஸ்க்கான டிரிப் குறித்து ரியா யாதவ் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த டிரிப் குறித்து முதலில் அவரது வீட்டில் சொன்னபோது, மிகவும் சாதாரணமாகதான் எடுத்து கொண்டார்களாம். ஆனால் அவர் சீரியஸாகதான் சொல்கிறார் என்பது தெரியவந்ததும் அவர்களும் டிரிப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

இலக்கின் மீதான வெறி

ஜுன் 17ம் தேதி டிரிப்பை தொடங்கிய ரியா யாதவ் ஜூலை 1ம் தேதி திரும்பி வந்து விட்டார். மணாலியை கடந்த பிறகு அவரது செல்போன் சிக்னலும் கட் ஆகி விட்டது. இதனால் அனைவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. எனினும் இந்த டிரிப்பை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று எண்ணி கொண்டே இருந்துள்ளார் ரியா யாதவ்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

பைக்கும், மன உறுதியுமே துணை

ஆனால் பைக்கும், இலக்கை எட்டியாக வேண்டும் என்ற மன உறுதியும் மட்டும்தான் ரியா யாதவிடம் இருந்தது. நிச்சயமாக இது அவரது வாழ்நாளில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவமாக இருக்கும்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

தனியாக சென்றதற்காக கண்ணீர் விட்டு அழுதவர்

ரியா யாதவ் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, என்சிசி முகாமிற்காக ஒரே ஒரே முறை தனியாக வெளியே சென்றுள்ளாராம். அதை தவிர்த்து விட்டு பார்த்தால், இதற்கு முன்பாக அவர் வேறு எங்கேயும் தனியாக சென்றதே இல்லை. அப்போது கூட என்சிசி முகாம் முடிந்து வந்ததும் கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் இன்னமும் அவருக்கு நினைவில் உள்ளதாம். ஆனால் தற்போதைய டிரிப் அவரை முழுமையாக மாற்றி விட்டது.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

சின்ன டிராபிக் ஜாமுக்கே பதற்றம் அடைந்தவர்

ரியா யாதவ் சமீபத்தில்தான் பைக் ஓட்டவே கற்று கொண்டுள்ளார். இதனால் கர்டங் லா டிரிப்பை வெற்றிகரமாக முடிப்பதில் அவருக்கு பல தடைகள் இருந்துள்ளன. சாலையில் அதிக டிராபிக் இருந்தால் கூட பதற்றம் அடைந்து விடக்கூடியவராகதான் ரியா யாதவ் ஆரம்ப கால கட்டத்தில் இருந்துள்ளார். ஆனால் இந்த டிரிப்தான் அவருக்கு பொறுமையாக இருப்பது மற்றும் தடைகளை எதிர்கொள்வதை பற்றி கற்று கொடுத்துள்ளது.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

தோள் கொடுத்த தோழி

ஷாரா காஸ்யப் (ஆப் ரோடு ரேலி ரேஸர்) என்பவருடன் இணைந்துதான் இந்த டிரிப்பிற்கு ரியா யாதவ் சென்றுள்ளார். இந்த டிரிப்பின்போது ரியா யாதவுக்கு தேவையான பல உதவிகளை ஷாரா காஸ்யப் செய்துள்ளார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

மலை சிகரத்தில் சுவாச பிரச்னை

தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரே ஒரு பேக்கில் எடுத்து கொண்டு சென்றுள்ளார் ரியா யாதவ். வழியில் அவருக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால் சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணும்போது, வேறு எதை பற்றியும் சிந்திக்காமல், சாதனையை பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்ததன் மூலமாகதான் ரியா யாதவ் சாதனை பெண்ணாக உருவெடுத்திருக்கிறார்.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

பாராட்டு மழை

ரியா யாதவ் இந்த டிரிப்பை மேற்கொள்ள போகிறார் என்பது முதலில் அவரது கல்லூரி தோழிகளுக்கு கூட அதிகமாக தெரியாது. ரியா யாதவ் டிரிப்பை முடித்து விட்டு வந்த உடனேயே கல்லூரி நிர்வாகத்தினரும், தோழிகளும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர். அத்துடன் ரைடர்கள் பலரிடம் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

வாட்ஸ் இஸ் நெக்ஸ்ட்?

ரியா யாதவ் இத்துடன் நின்று விடப்போவதில்லை. அடுத்த ஆண்டில், ரெய்டு டி ஹிமாலயா செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாக இமயமலையில் பயணிக்கும் இதுதான் உலகின் மிகவும் அதிகபட்ச ரேலி ரெய்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ்...19 ஆயிரம் அடி உயர சிகரத்தை பைக்கில் எட்டி பிடித்த சாதனை மாணவி ரியா யாதவ்...!

சாதனை பெண்கள் உருவெடுப்பார்கள்

தற்போதைய நிலையில் ஆண் ரைடர்களே அதிகளவில் இருந்தாலும், இனி வரும் நாட்களில் அதிக பெண் ரைடர்களும் உருவெடுப்பார்கள் எனவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ரியா யாதவ்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
DU biker girl conquers Khardung La, attempts to break record. read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X