வெறும் 15 விமானங்கள் ரூ.50 ஆயிரம் கோடி!! எமிரேட்ஸ் வாங்க போகும் விமானங்களை பற்றிதான் துபாய் முழுக்க பேச்சு!

எமிரேட்ஸ் (Emirates), உலகின் பிரபலமான ஏர்லைன் நிறுவனமான இது, கூடுதலாக 15 ஏர்பஸ் ஏ350-900எஸ் விமானங்களை புதியதாக வாங்குகிறது. இந்த ஏ350-900எஸ் விமானங்கள் உள்பட மொத்தம் 65 விமானங்களுக்கு எமிரேட்ஸ் ஆர்டர் செய்துள்ளது. துபாயில் நடைபெற்றுவரும் 2023 ஏர்ஷோவில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் கையெழுத்திட்டு உள்ளது.

உலகளவில் பிரபலமான ஏர்லைன் நிறுவனங்கள் என்று எடுத்துப் பார்த்தால், நிச்சயம் எமிரேட்ஸ் அவற்றுள் ஒன்றாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமான சேவை ஆனது நம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

emirates ordered airbus a350-900s aircrafts

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஏர்லைன் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் விதமாக கூடுதலாக விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்குகின்றது. துபாயில் நடைபெற்றுவரும் 2023ஆம் ஆண்டிற்கான ஏர்ஷோவில் வைத்து, புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எமிரேட்ஸ் கையெழுத்திட்டு உள்ளது. இதன்படி, மொத்தம் 65 விமானங்களை தனது சேவைக்காக எமிரேட்ஸ் வாங்குகிறது.

இதில் 15 ஏர்பஸ் ஏ350-900எஸ் விமானங்கள் அடங்குகின்றன. ஏ350-900எஸ் விமானங்களை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இவை அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமானவை ஆக விளங்குகின்றன. உலகின் மிகவும் மாடர்னான மற்றும் செயல்திறன்மிக்க விமானம் ஏ350 ஆகும். இத்தனைக்கும், ஏ350 விமானங்கள் நன்கு அகலமாக வடிவமைக்கப்படுகின்றன.

இருப்பினும், செயல்படுதிறனிலும் சரி, ரேஞ்ச் எனப்படும் மைலேஜிலும் சரி ஏ350 விமானங்கள் சிறப்பானவை ஆக உள்ளன. குறிப்பாக ரேஞ்ச் விஷயத்தில், 300 - 410 இருக்கைகளை கொண்ட விமானங்கள் பிரிவில் ஏ350 அளவிற்கு வேறெந்த விமானமும் ரேஞ்சை வழங்குவதில்லை. சுமார் 9,700 நாட்டில் மைல் (கிட்டத்தட்ட 18 ஆயிரம் கிமீ) தொலைவிற்கு ஏ350 விமானங்களை நான்-ஸ்டாப்பாக இயக்கி செல்ல முடியும்.

இதனால், குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமின்றி, மிக நீண்ட தூர பயணங்களுக்கும் எமிரேட்ஸ் போல பல ஏர்லைன் நிறுவனங்கள் ஏ350 விமானங்களை தைரியமாக பயன்படுத்துகின்றன. ஏ350 விமானங்களை உங்களில் நிறைய பேர் நேரில் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுதான் ஏ350 விமானமா என்பது உங்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

ஏனெனில், ஏ350 விமானத்தின் வடிவமைப்பு ஒன்றும் புதுமையானதாகவோ அல்லது விசித்திரமானதாகவோ இருக்காது. நேர்த்தியான உடலமைப்பில், அளவில் நன்கு பெரியதாக ஏ350 விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன. விமானத்தை பெரியதாக வடிவமைத்தால், உண்டாகும் பிரச்சனை என்னவென்றால் விமானத்தின் எடை அதிகரித்துவிடும். இதனால், என்ஜின் அதிகமாக உழைக்க வேண்டிவரும். அதற்கேற்ப, நிறைய எரிபொருளை என்ஜின் குடிக்கும்.

இந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, எடை குறைவான பாகங்கள் மற்றும் நியூ ஜென்ரேஷன் என்ஜின்களை கொண்டு ஏ350 விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அத்துடன், ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் தொழிற்நுட்பங்களுடன் மிகவும் சிறப்பான ஏரோடைனாமிக்ஸில் ஏ350 விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக, ஏ350 விமானங்கள் 25% குறைவாக எரிபொருளை குடிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கும் ஏ350-900எஸ் விமானத்தின் முக்கிய சிறப்பம்சமே அதன் அதிக ரேஞ்ச் தான். விமான சேவையில் எரிபொருளுக்கான செலவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏ350 விமானங்கள் பெரும்பாலான வழித்தடங்களில் ஒன்-ஸ்டாப் விமானமாக பயன்படுத்தப்படுவதால், எரிபொருளின் செலவு பெரிய அளவில் குறைகிறது. இதன் காரணமாகவே, எமிரேட்ஸ் மட்டுமின்றி நிறைய ஏர்லைன் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்தாவது ஏ350 விமானங்களை வாங்க முயற்சிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 23:25 [IST]
English summary
Dubai airshow 2023 emirates ordered 15 airbus a350 900s aircrafts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+