இந்தியன் என்று கெத்தா சொல்லுவோம்!! இந்தியாவின் போர் விமானத்தை பார்த்து வாயடைத்து போன துபாய் மக்கள்!
இந்திய வான் படை (IAF)-இன் HAL LCA தேஜாஸ் போர் விமானம், நடைபெற்றுவரும் 2023 துபாய் ஏர்ஷோ மூலமாக மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. கடந்த 2022ஆம் வருடத்தில் நடைபெற்ற இதே ஏர்ஷோவில் HAL LCA தேஜாஸ் மூலமாக இந்திய வான் படை பங்கேற்று இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த வருடத்திலும் UAE-க்கு சென்றுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான UAE ஏர்ஷோ கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து புதிய கண்டுப்பிடிப்புகள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. எட்ஜ் குழுமத்தின் அனாவியா நிறுவனம் உருவாக்கிய ஆளில்லா-இயங்கும் எச்.டி-100 மல்டி-ரோல் ஹெலிகாப்டரை பற்றி சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

இதற்கு மத்தியில், கோடி ரூபாய் மதிப்பிலான சில பல விமான ஒப்பந்தங்களும் இந்த கண்காட்சியில் கையெழுத்தாகி உள்ளன. அதேநேரம், பார்வையாளர்களை கவரும் விதமாகவும், தங்களது திறமையை வெளியுலகிற்கு காண்பிக்கும் விதமாகவும் விமான சாகச நிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. இந்த வகையில், இந்திய வான் படையும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.
இந்திய வான் படையின் HAL LCA தேஜாஸ் விமானம் கண்காட்சியில் பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்ஷோ கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற போதும் இந்திய வான் படை இந்த போர் விமானத்தை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போது, பார்வையாளர்களின் கவனத்தை IAF-இன் HAL LCA தேஜாஸ் வெகுவாக கவர்ந்திருந்தது.

அதேபோன்று தற்போதும், HAL LCA தேஜாஸ் விமானம் அதன் கம்பீரமான, பிரம்மாண்டமான உடலமைப்பினால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேஜாஸில் சில பிராண்ட் புதிய ஹார்ட்வேர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சில ஹார்ட்வேர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அப்டேட்டின் மூலமாக தேஜாஸ் விமானத்தின் ரேஞ்ச் எனப்படும் மைலேஜ் ஆனது 45கிமீ-இல் 120கிமீ ஆக அதிகரித்துள்ளது. HAL LCA தேஜாஸ் ஒர் எடை குறைவான, மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் அளவில்-சிறியதான விமானம் ஆகும். இதன் மூலமாக, உலகின் சிறிய & எடை குறைவான சூப்பர்சோனிக் போர் விமானமாக HAL LCA தேஜாஸ் விளங்குகிறது.

இத்தகைய போர் விமானத்தில் புதியதாக வழங்கப்பட்டிருக்கும் ஹார்ட்வேருக்கு லாங்-ரேஞ்ச் துல்லியமாக-வழிக்காட்டும் வெடிமருந்துகள் (LR-PGMs) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஹார்ட்வேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்-டரிக் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த அல்-டரிக் நிறுவனமும் எட்ஜ் குழுமத்தில்தான் ஓர் அங்கமாக வகிக்கிறது.
இந்த ஹார்ட்வேரை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோடைனாமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், எட்ஜ் குழுமத்தின் அல்-டரிக் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியது. அல்-டரிக்கின் வெடிமருந்துகள் சிஸ்டம் ஆனது பகல்-இரவு என எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு காலநிலையிலும் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வருடத்தில் துபாய் ஏர்ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள IAF தேஜாஸ் முன்பை விட அதிநவீனமானதாக மாறியுள்ளது. ஆனால், அல்-டரிக் லாங்-ரேஞ்ச் வெடிமருந்து சிஸ்டம் தேஜாஸ் போர் விமானத்தில் இந்த கண்காட்சிக்காகவே பொருத்தப்பட்டுள்ளதே தவிர்த்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படவில்லை. இந்த சிஸ்டம் வந்தபின் தேஜாஸ் இன்னும் செயல்திறன்மிக்க, எடை குறைவான போர் விமானமாக மாறும்.


Click it and Unblock the Notifications









