படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
துபாயில் பெய்த கடும் மழை காரணமாக சென்னை வெள்ளம் போல துபாயும் தற்போது வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு கார்கள் வெள்ள நீரில் மிதந்து வருகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல காஸ்ட்லியான கார்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
துபாய் நாட்டில் தற்போது கடும் மழை பெய்தது. இந்த மழையால் துபாய் நாடே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதங்களில் சென்னை பகுதியில் பெய்யும் மழை போல துபாயில் தற்போது மழை பெய்து வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது.

இந்தியாவிலும் இப்படியாக மழை பெய்தால் வெள்ள நீரில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் எல்லாம் மூழ்கும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதேபோன்ற காட்சிகளை தற்போது துபாயிலும் பார்க்க முடிகிறது. பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. துபாய் நாட்டில் அதிகமான காஸ்ட்லியான கார்கள் பயன்படுத்தப்படுவதால் அந்த கார்கள் எல்லாம் மழை நீரில் மூழ்கியுள்ளன.
இப்படியாக வெளியான காட்சி ஒன்றில் போர்ஷே நிறுவனத்தின் டைகன் கார் ஒன்று தண்ணீரில் மிதந்த படி சென்று பின்பு சாலையில் ஓடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஒரு சாலை பாலத்தின் அருகே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வரிசையாக அந்த பாலத்தில் வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலத்திற்கு கீழே மிகப்பெரிய அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த வீடியோ காட்சியில் துவக்கத்தில் இந்த தண்ணீருக்கு நடுவே போர்ஷே நிறுவனத்தின் டைகன் கார் ஒன்று மிகுந்த படி செல்கிறது. காரின் அசைவுகளை வைத்தே நாம் கார் தண்ணீரில் நகராமல் மிதந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. மெதுவாக மிதந்து மிதந்து தரை தட்டும் அளவிற்கு இந்த கார் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
பின்னர் ஒரு கட்டத்தில் தரைப்பகுதி வரும்போது காரின் உள்ளே இருக்கும் டிரைவர் காருக்கு ஆக்சிலேட்டரை கொடுத்து காரை நகர்த்த முயற்சி செய்கிறார். அப்பொழுது கார் மெல்ல நகர்ந்து தண்ணீரில் இருந்து வெளியே வந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சாலையில் ஓடுகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் போர்ஷே நிறுவனத்தின் கார்கள் தரமான தயாரிப்புகளாக இருக்கும் என இதை ஆதாரமாக வைத்து சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இந்த வீடியோ பார்ப்பவர்களை அசர வைக்கும் வகையில் சிறப்பான காட்சிகளை கொண்ட வீடியோவாக அமைந்துள்ளது. இதனால் பலர் சமூக வலைதளங்களில் இதை பகிர்ந்து வருகிறார்கள்.
வீடியோவில் உள்ள இந்த போஷே டைகன் கார் அதிக விலை மதிப்பு கொண்ட கார் ஆகும். போர்ஷே டைகன் காரை பொறுத்தவரை மொத்தம் ஆறு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. டைகன், டைகன் 4எஸ்,டைகன் டர்போ, டைகன் டர்போ எஸ், டைகன் டர்போஜிடி, மற்றும் டைகன் டர்போ ஜிடி வெயசஜ் பேக்கேஜ் உள்ளிட்ட வேரியன்ட்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன.
இந்த கார் போர்ஷே நிறுவனத்தின் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் காராக இருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படாமல் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை இந்திய மதிப்பில் ரூபாய் 1.61 கோடி முதல் ரூபாய் 2.44 கோடி வரை வேரியன்டை பொருத்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 79.2 முதல் 93.4 கிலோ வாட் ஹவர் கொண்ட பேட்டரிகள் பொறுத்து பொருத்தப்படுகிறது. இது ஒரு தடவை சார்ஜ் போட்டால் 431 கிலோமீட்டர் முதல் 452 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போர்ஷே நிறுவனத்தின் கார்கள் எல்லாம் தரமான தயாரிப்புகள் என்று நமக்கு தெரியும். அதன் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் கார்கள் மாதிரி இல்லாமல் தண்ணீர் சூழ்ந்து கொண்டாலும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த வீடியோவை மிகப்பெரிய சாட்சியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









