இன்னும் 3 வருசத்துல பறக்கும் டாக்ஸி வரப்போகிறது! டிக்கெட் விலை இப்ப உள்ள கால் டாக்ஸியை விட ரொம்ப கம்மி!
துபாய் நாட்டில் இந்தியாவின் முதல் பறக்கும் டாக்ஸி அறிமுகமாகப்போகிறது. தற்போது உள்ள கால் டாக்ஸியைவிட குறைவான விலையில் இந்த டாக்ஸியை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்
தற்போது ஒருவர் குறுகிய தூரத்திற்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் பெரும்பாலும் சாலை வழியாகத் தான் பயணிப்பார்கள். சில பெரு நகரங்களில் மட்டும் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் மெட்ரோ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியுள்ள இடங்களில் மட்டும் மக்கள் ரயிலைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இனி குறுகிய தூரப் பயணத்திற்கும் வான் வழிப் பயணத்தைத் தேர்வு செய்வோம் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம் நம் மொட்டை மாடியில் ஏறி நாம் செல்ல வேண்டிய இடத்தின் மொட்டை மாடியில் இறக்கும் வகையில் பறக்கும் காரை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அட இந்த செய்தியைத் தான் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் எதுவும் வந்தபாடில்லை என மக்கள் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல இப்பொழுது வந்துள்ள செய்தி உறுதியாக இந்த பறக்கும் கார் விரைவில் நிஜமாக வரவுள்ளதற்கான செய்தி
துபாய் நாட்டில் பறக்கும் கார்களை தயாரித்து இதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகப் பறக்கும் கார்களை உருவாக்கிவிட்டது. ஆனால் இந்த வாகனங்களை மக்கள் யாரும் சொந்தமாக வாங்கிவிட முடியாது. துபாய் அரசே இந்த பறக்கும் கார் சேவையை பொது போக்குவரத்தாக நடத்துகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த கார்கள் எல்லாம் ஒரே கண்ட்ரோல் சென்டரை மையமாகக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் தனி நபர் சொந்தமாக இதைப் பயன்படுத்தினால் வானில் டிராஃபிக் பிரச்சனை வரும் என்பதால் இதை முற்றிலுமாக தவிர்த்து முழுமையாக அரசே இதை கண்ட்ரோல் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று துபாய் நாட்டில் உலக அரசு மாநாடு துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் துபாயில் இந்த மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டுப் பிரதமர் மற்றும் துணை மன்னர் முகம்மது பின் ரஷீத் அல்ல மக்தோவும் 2026ம் ஆண்டு துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை துவங்கப்படும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கான பறக்கும் கார்களுக்கான ஸ்டாண்ட்கள் என அழைக்கப்படும் வெர்டிபோர்ட்களை கட்ட டிசைனிற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இன்னும் 3 ஆண்டுகளில் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் அந்நாட்டின் பொது போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து அணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அகமத் பாஹ்ரோயான் என்பவர் கலந்து கொண்டார்.
அவர் கூறும் போது : "இந்த பறக்கும் டாக்ஸி மட்டும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் அதை மக்கள் பயன்படுத்தமுடியும். பறக்கும் டாக்ஸி என்பதால் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என நினைக்க வேண்டாம். சாதாரண டாக்ஸியை விடக் குறைவான விலையில் இந்த சேவையை வழங்கும் வகையில் தான் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதனால் யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். " எனப் பேசினார்.
ஒரு காலத்தில் இப்படியாகப் பறக்கும் கார்களை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷனாக பார்த்தோம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த கனவு நினைவாகப் போகிறது. தற்போது இதற்காக துபாய் அரசு அதிகம் செலவு செய்திருந்தாலும், ஆனால் அதிகமாகத் தயாரிப்பு செய்யப்பட்ட பின்பு அதன் விலை குறைந்துவிடும். மக்கள் பயன்படுத்தத் துவங்கினால் விலை மேலும் குறையும் வகையில் இந்த திட்டத்தை வகுத்துள்ளனர்.
தற்போது துபாய் அரசு பறக்கும் டாக்ஸிக்காக வடிவமைத்துள்ள பறக்கும் கார் முழு சார்ஜில் 240 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.அது மட்டுமல்ல இது மணிக்கு 300 கி.மீ வேகத்திலும் பறக்கும் தன்மை கொண்டது. இதை துபாய் அரசு முதற்கட்டமாக இன்டர்சிட்டி பயணத்திற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. துபாய்-அபுதாபி, துபாய் - ஃப்பூஜய்ரா ஆகிய நகரங்களுக்கிடையே பயணத்திற்காகப் பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளது.
இது பயன்பாட்டிற்கு வந்தால் துபாய் மற்றும் அபுதாபி இடையே வெறும் 30 நிமிடத்தில் பயணித்துவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் உலகம் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் சந்திக்கப்போகிறது. அதில் முக்கியமான மாற்றமாக இந்த பறக்கும் காரின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் பறக்கும் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் பெங்களூரு நகரில் தான் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








