ரோந்து சுற்றுவதற்கு புகாட்டி வேரோன் கார் வாங்கிய துபாய் போலீஸ்!

உலகின் அத்துனை முன்னணி பிராண்டுகளின் சூப்பர் கார்களையும் வாங்கி ரோந்து பணியில் ஈடுபடுத்திவிட்டனர் துபாய் போலீசார். இதில் மிச்சமிருந்தது புகாட்டி வேரோன் மட்டுமே.

அதையும் விடுவார்களா என்ன? சமீபத்தில் புகாட்டி வேரோன் காரையும் வாங்கி ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

 எந்திர பறவை

எந்திர பறவை

உலகின் அதிவேக கார் மாடல்களில் ஒன்று. மணிக்கு 408.47 கிமீ வேகத்தை தொட்டதாக புகாட்டி தெரிவித்தது. தற்போது உலகின் அதிவேக கார் பட்டத்தை அமெரிக்காவின் ஹென்னிஸி வேனோம் ஜிடி பெற்றது நினைவிருக்கலாம்.

சுவாசம்

சுவாசம்

இந்த கார் டாப் ஸ்பீடில் செல்லும்போது நிமிடத்திற்கு 45,000 லிட்டர் காற்றை கிரகித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனுக்கு 4 நாட்களுக்கு தேவையான காற்றாக இது குறிப்பிடப்படுகிறது.

பவர்

பவர்

வாடகைக்கு கிடைக்கும் புகாட்டி வேரோன் ஸ்டான்டர்டு மாடல். இந்த காரில் 1001 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் டபிள்யூ- 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு சீகுவன்ஷியல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0-100 கிமீ வேகத்தை 2.46 வினாடிகளிலும், 0-300 கிமீ வேகத்தை 16.2 வினாடிகளிலும் இந்த கார் தொட்டுவிடும் வல்லமை கொண்டது.

 இதர சூப்பர் கார்கள்

இதர சூப்பர் கார்கள்

ஃபெராரி எஃப்எஃப், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி, செவர்லே கமாரோ, மெக்லாரன் 12சி, லம்போர்கினி அவென்டேடார் ஆகிய கார்களை ஏற்கனவே வாங்கி ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் துபாய் போலீசார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2014, 11:38 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+