அடுத்து மெக்லாரன் கார் வாங்கிய துபாய் போலீஸ்
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படும் துபாய் போலீசார் ரோந்து பணிகளுக்காக சூப்பர் கார்களை வாங்கி வருவது குறித்து ஏற்கனவே செய்தி வழங்கியிருந்தோம்.
லம்போர்கினி, ஃபெராரி என பல முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களை அந்நாட்டு போலீசார் ஏற்கனவே வாங்கியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது மெக்லாரன் எம்பி4 12 சூப்பர் காரும் இணைந்துள்ளது.

துபாய் போலீசாரின் சின்னம் மற்றும் அந்நாட்டு போலீசாரின் 999 என்ற அவசர உதவி எண்ணும் அந்த காரில் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த காரின் படத்தை ட்விட்டரில் துபாய் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ரோந்து பணிகளிலும், அவசர கால பணிகளிலும் இந்த கார் பயன்படுத்தப்படும். துபாயில் ஆபத்து, அவசர உதவிகளுக்கு 999 என்ற எண்ணை அழைத்தால் அடுத்த 10 நிமிடங்களில் போலீசாரின் உதவி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்லாரன் எம்பி4 12சி காரில் 616 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் தொட்டுவிடும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 329 கிமீ வரை வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.


Click it and Unblock the Notifications








