அடுத்து புகாட்டி வேரோனையும் சேர்த்த துபாய் போலீஸ்!
வாரா வாரம், ஆரவாரம் என்பதுபோல் துபாய் போலீசார் வாரம் ஒரு சூப்பர் கார் அல்லது ஆடம்பர காரை தங்களது போலீஸ் பணியில் இணைத்து வருகின்றனர். இந்த வார பரபரப்பாக உலகின் அதிவேக கார்களில் ஒன்றாக கருதப்படும் புகாட்டி வேரோன் காரை சேர்த்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
துபாய் போலீசார் பயன்படுத்தும் கார்களின் வண்ணம் பூசப்பட்ட புதிய புகாட்டி வேரோன் காரின் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் துபாய் போலீஸ் தலைவர் தாஹி கால்ஃபன் தமீம். லம்போ அவென்டேடார், ஃபெராரி எஃப் எஃப், அஸ்டன் மார்ட்டின் உள்ளிட்ட கார்களின் வரிசையில் தற்போது புகாட்டி வேரோன் காரும் சேர இருக்கிறது. ரூ.15 கோடி விலையில் புகாட்டி வேரோன் கார் விற்பனை செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications








