பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

தொழில்நுட்பத்தில் ஓர் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. துபாய் போலீசார் பறக்கும் பைக்குகளில் உலா வர தொடங்கியுள்ளனர்.

உலகின் மிகவும் அதிநவீன காவல்துறை என்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது துபாய் காவல் துறையாகதான் இருக்கும். லம்போர்கினி, ஃபெராரி என முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

சூப்பர் கார்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே இந்திய சாலைகளில் சூப்பர் காரை பார்ப்பது என்பதே மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் கார்களை எல்லாம் துபாய் போலீசார் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இந்த சூழலில் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் செயல்பட்டு வரும் ஹோவர்சர்ஃப் (Hoversurf) என்ற நிறுவனம், துபாய் போலீசாருக்காக பறக்கும் பைக்குகளை தயாரித்துள்ளது. இதற்கு ஹோவர்சர்ஃப் எஸ்3 2019 (Hoversurf S3 2019) என பெயரிடப்பட்டுள்ளது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பார்ப்பதற்கு தேள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த பறக்கும் பைக்குகளை ஸ்கார்பியன் என்றும் கூட குறிப்பிடுகின்றனர். இதன் விலை நம்மை நிச்சயமாக தலை சுற்ற வைத்து விடும். ஆம், ஒவ்வொரு பறக்கும் பைக்கின் விலையும் தலா சுமார் 1 கோடி ரூபாய்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இந்த பறக்கும் பைக்குகளின் சிறப்பம்சங்கள் குறித்து துபாய் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த பறக்கும் பைக்கின் மொத்த எடை 114 கிலோ மட்டுமே. இது அதிகபட்சமாக 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்கள். இதில், ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதுதவிர ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆள் இல்லாமலும் இதனை இயக்கலாம். இதில் ஆள் இருந்தால் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்க முடியும்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

அதே சமயம் ஆள் இல்லாவிட்டால் 40 நிமிடங்கள் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் இதற்கு உண்டு. இந்த பறக்கும் பைக்குகள் மின்சாரத்தால் இயங்க கூடியவை. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

இது செங்குத்தாக டேக் ஆப் ஆகும். அதேபோல் செங்குத்தாகவே லேன்டிங்கும் செய்து கொள்ள முடியும். எனவே ஓடுதளம் போன்ற விஷயங்கள் எதுவும் தேவையே இல்லை. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உடனடியாக பறக்க தொடங்கலாம்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

அவசரமான சூழ்நிலைகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த பறக்கும் பைக்குகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். முதற்கட்டமாக ரோந்து பணியிலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் பணியிலும் இதனை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பறக்கும் பைக்குகளை வழங்குவது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனத்திற்கும், எங்களுக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. தற்போது பறக்கும் பைக்குகளை எப்படி இயக்குவது? என்பது தொடர்பாக ஹோவர்சர்ஃப் நிறுவனம் எங்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

துபாய் காவல் துறையை சேர்ந்த 2 குழுக்கள் தற்போது பயிற்சி பெற்று வருகிறன்றன. வரும் 2020ம் ஆண்டில் இந்த பறக்கும் பைக்குகள், துபாய் காவல் துறையில் சேர்க்கப்படும். எவ்வளவு பறக்கும் பைக்குகளை பயன்படுத்துவது என்பது தொடர்பாக தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்றார்.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

ஐக்கிய அரபு எமீரகத்தில், ஜிட்டெக்ஸ் என்ற மாநாடு கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போதே பறக்கும் பைக் தொடர்பான சில தகவல்களை ஹோவர்சர்ஃப் நிறுவனம் வெளியிட்டு விட்டது. தற்போது துபாய் போலீசாருக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பறக்கும் பைக்கில் கெத்தாக உலா வரும் துபாய் போலீசார்... ஏக்க பெருமூச்சு விடும் நம்ம ஊரு காக்கிகள்...

பறக்கும் பைக்குகளில் துபாய் போலீசார் தீவிரமாக பயிற்சி பெற்று வரும் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

இந்திய போலீசாருக்கு டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் போன்ற சாதாரண மோட்டார் சைக்கிள்கள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் குஜராத், கொல்கத்தா போலீசாரிடம் மட்டும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகள் உள்ளன. எனினும் அவை விஐபி கான்வாய்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, November 12, 2018, 13:03 [IST]
English summary
Dubai Police Start Training on Flying Bikes. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+