லம்போ காருடன் கூகுள் கிளாஸ்... கிரிமினல்களை லபக்குவதற்கு துபாய் போலீஸ் ரெடி!
ரோந்து பணிக்காக உலகின் காஸ்ட்லி கார்களை வாங்கி அடுக்கிய துபாய் போலீசார் அடுத்ததாக கூகுள் கிளாஸுடன் கிரிமினல்களை லபக்குவதற்கு தயாராகி விட்டனர்.
ஆம், லம்போர்கினி மற்றும் புகாட்டி கார்களில் செல்லும் துபாய் போலீசாருக்கு கூகுள் கிளாஸ் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், கிரிமினல்களை மிக எளிதாக பிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் கிளாஸ்
மூக்குக் கண்ணாடி போன்று அணிந்து கொள்ளக்கூடிய சிறிய கம்ப்யூட்டர்தான் கூகுள் கிளாஸ். இன்டர்நெட், புளூடூத் வசதிகளை கொண்ட இந்த கூகுள் கிளாஸ் மூலம் புகைப்படங்கள், எடுப்பது, கூகுளில் தகவல்களை தேடுவது போன்ற பல விஷயங்களை வாய்மொழி உத்தரவு மூலம் செய்ய முடியும். இ-மெயில்களை பார்த்துக் கொள்ளவும், வாய்மொழி உத்தரவு மூலம் பதில் அனுப்பும் வசதி கொண்டது. அதனை துபாய் போலீசாருக்கு ஏற்ற வகையில் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

அடையாளம் காணும் வசதி
முகத்தை அடையாளும் காணும் வசதி கொண்ட சாதனத்துடன் கூகுள் கிளாஸ் துபாய் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பொது இடங்களில் அல்லது குற்றவாளிகளை கைது செய்ய செல்லும்போது, குற்றவாளியின் முகத்தை அடையாளும் கண்டு போலீசாருக்கு துல்லியமாக தெரிவித்துவிடும் இந்த கூகுள் கிளாஸ்.

டேட்டா பேஸ்
துபாய் போலீசாரின் குற்றப் பதிவேடுகள் மற்றும் குற்றவாளிகளிந் புகைப்படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் டேட்டா பேஸ் ஆன்லைனில் கூகுள் கிளாஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

லபக், லபக்
ரோந்து செல்லும்போது வழியில் சிக்கும் குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் கண்டு உடனுக்குடன் போலீசாருக்கு கூகுள் கிளாஸ் தெரிவிக்கும்.

போக்குவரத்து விதிமீறல்கள்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்களை எளிதாக பிடிப்பதற்கும் இந்த கூகுள் கிளாஸ் உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுலா தலங்கள்
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் முதற்கட்டமாக இந்த கூகுள் கிளாஸை பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கிரிமினல்களின் நடமாட்டத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

விலை
ஒரு கூகுள் கிளாஸ் 1,500 டாலர் விலையில் துபாய் போலீசார் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








