புறாவுக்காக தேர் கொடுத்த பாரி வள்ளல் எல்லாம் பழைசு, இனி இதுதான் புதுசு! இளவரசராக மனசுல நிறைஞ்சிட்டாரு

ஒரு சிலர் எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், மனிதநேயத்துடன் நடந்துக் கொள்வதை பார்க்கும்போதே ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவ்வாறுதான், துபாய் போன்ற உலகின் மிக முக்கியமான பொருளாதார நகரத்தின் இளவரசராக இருப்பவர், புறா கூடுக்கட்டி வாழ தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen) காரை பல நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளார். இன்னும் சொல்லப்போனால், புறா பயப்பட போகிறது என்பதற்காக தனது ஜி-வேகன் காரின் அருகில் கூட யாரையும் செல்ல விடாமல் பாதுகாத்து வருகிறார். துபாய் இளவரசரின் இந்த மனிதநேயமிக்க செயலை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

உலகளவில் பல பொருளாதார விஷயங்களுக்கு மையமாக துபாய் திகழ்ந்து வருகிறது. சூடான பாலைவன நகரமான துபாயில் தற்சமயம் பல டிரில்லியன் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. இத்தகைய நகரத்தின் பட்டத்து இளவரசராக இருப்பவர், ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) ஆவார்.

dubai prince left his mercedes-amg

2008ஆம் ஆண்டில் இருந்து துபாய் பட்டத்து இளவரசராக இருக்கும் 42 வயதான ரஷீத் அல் மக்தூம், அடுத்த துபாய் அரசராக பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு மிக உயரிய பதவியில் இருப்பவரிடம் தான் மனிதநேயமும் தலைத்தோங்குகிறது. பொதுவாகவே, துபாய் மக்களிடம் இருக்கும் சொகுசு கார்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில், அந்த நகரத்தில் பல விலையுயர்ந்த கார்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

அப்படியிருக்க, துபாய் பட்டத்து இளவரசரிடம் இருக்கும் சொகுசு கார்களை பற்றி சொல்லவா வேண்டும்... அவற்றுள், ரஷித் அல் மக்தூம் தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் காரை புறாவுக்காக என்றே பல நாட்களாக பயன்படுத்தாமல், பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அந்த வாகனத்தின் அருகில் யாரும் சென்றுவிட கூடாது என்பதற்காக, அதனை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

dubai prince left his mercedes-amg

அதுமட்டுமின்றி, பார்க்கிங் பகுதியாக இருப்பினும், அந்த குறிப்பிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் காருக்கு அருகில் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த வேண்டாம் என இளவரசர் கட்டளையிட்டுள்ளார். துபாய் இளவரசரின் இந்த செயல் இணையத்தில் படங்கள் உடன் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அவ்வாறு வெளியான படங்களுள், அந்த ஜி-வேகன் காரில் இளவரசர் ரஷீத் அல் மக்தூம் இருக்கும் பழைய படங்களும் இடம்பெற்றுள்ளன.

துபாய் இளவரசரிடம் இருப்பது, சாதாரண ஜி-வேகன் கார் கிடையாது. இது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (AMG G63) என்கிற பவர்ஃபுல்லான மற்றும் விலையுயர்ந்த கார் ஆகும். இந்தியாவிலும் விற்பனையில் உள்ள இந்த வாகனத்தின் விலை ஆனது ரூ.4 கோடியாக உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே; ஆன்-ரோடு விலை இன்னும் 1 கோடி ரூபாய் அதிகமாக வரலாம்.

dubai prince left his mercedes-amg

இத்தகைய காரை தான் துபாய் இளவரசர் புறாவுக்காக கொடுத்துள்ளார். இளவரசரின் ஏஎம்ஜி ஜி63 காரின் பொனெட்டின் மீது இரு புறாக்கள் ஒன்றாக இணைந்து கூடு கட்டி, முட்டையிட்டு அதில் குஞ்சு பொறித்துள்ளன. ஆதலால், குஞ்சு வளர்ந்து பறக்க தயாராகும் வரையில் அவை அங்கிருந்து செல்லாது. இளவரசரும் தனது ஜி-வேகன் காரை அங்கிருந்து எடுக்கமாட்டார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாய் இளவரசரின் இந்த மனிதநேயமிக்க செயல் வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. புறாவுக்காக தேர் கொடுத்து பாரி வள்ளல்கள் இப்போதும் உலகம் முழுக்கவே ஆங்காங்கே இருக்க தான் செய்கின்றனர். அளவு கடந்த பணம் இருந்தும் அதன் போதையில் மயங்காமல், எப்போதும் மனிதநேயத்துடன் செயல்படும் பணக்காரர்களை பார்த்தாலே வாழ்க்கை மீது இனம்புரியாத நம்பிக்கை வந்துவிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 11:50 [IST]
English summary
Dubai prince has left his mercedes amg g63 luxury car for pigeons
மேலும்... #dubai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X