மணலில் சிக்கிய டிரக்கை தன்னுடைய காரால் மீட்டு வியக்க வைத்த துபாய் இளவரசர்!

Posted By: Staff

பாலைவன தேசமான துபாயில் மணலில் சிக்கிக்கொண்ட டிரக் ஒன்றினை அந்த வழியாகச் சென்ற துபாயின் பட்டத்து இளவரசர் தன்னுடைய காரால் மீட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நடத்து வருக் மக்களாட்சியே நடைமுறையில் உள்ளது. என்றாலும் கூட துபாய், சவுதி அரேபியா, தாய்லாந்து, புரூனே போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் மன்னராட்சி நடைபெற்று வருகிறது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

பொதுவாக மன்னர்கள் அல்லது பட்டத்து இளவரசர்கள் சாமானியர்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டவர்களாகவே இருப்பர். இதனை துபாயில் பட்டத்து இளவரசர் ஒருவர் சாதாரண டிரக் ஓட்டுநருக்கு தானே களத்தில் இறங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக உள்ளது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

துபாயில், வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத பாலைவன சாலை ஒன்றில் மண் ஏற்றி வந்த டிரக் ஒன்று நன்றாக மணலில் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்துள்ள துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது, மணலில் சிக்கிய டிரக்கை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

துபாய் இளவரசரசர் ஓட்டிவந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 ஆஃப் ரோடிங் எஸ்யூவி ரக காரை மணலில் சிக்கிய லாரியுடன் கயிறு மூலம் இணைத்தனர்.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

பின்னர் இளவரசரே தனது காரை ஸ்டார்ட் செய்து டிரக்கை மீட்கும் முயற்சியில் இறங்கினார். எனினும், முதல் முயற்சி பலனிக்காமல் போனது. காரின் சக்கரங்கள் சுழன்று சறுக்கியதோடு, டிரக்குடன் கட்டப்பட்ட கயிறும் அறுந்ததது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

சமயோசிதமாக யோசொத்த இளவரசர், டிரக் டிரைவரிடம் சென்று டிரக்கின் பின்புறம் லோடு பகுதியில் இருந்த மண்ணை சிறிது குறைக்குமாறு கூறியுள்ளார். சுமையை குறைத்த பின்னர், மீண்டும் மேற்கொண்ட முயற்சி பலனலித்துள்ளது. மணலில் சிக்கிக்கொண்டிருந்த அந்த டிரக் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

தனது டிரக் மீட்கப்பட்டதால் இளவரசருக்கு அந்த டிரக் டிரவர் கைகுலுக்கு நன்றி தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

டிரக் டிரைவருக்கு இளவரசரின் மனிதநேய உதவி: வைரலான வீடியோ

சாமானிய டிரக் டிரைவருக்கு பட்டத்து இளவரசர் உதவியுள்ளது மனித நேயத்தை போறுவதாக உள்ளதால் தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் பாராட்டு பெற்று வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடீயோவை மேலே உள்ள இணைப்பில் பாருங்கள்...

English summary
Dubai crown prince helps rescue a truck from desert

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark