தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி அத்தியாவசியம் அல்லாத தேவைகளுக்கு துபாய்க்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிசம்பர் மாதங்களில் சென்னையில் கடும் மழை ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போல் துபாய் நாட்டில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டிய தீர்த்ததால் அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு அந்நாடு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் தினந்தோறும் இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த பயணிகளுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தல் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து அத்தியாவசியம் இல்லாத தேவைகளுக்காக துபாய் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தை மாற்றி அமைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் விமானத்தை தரை இறக்குவதும் டேக் ஆப் செய்வதும் பெரும் சவாலான காரியமாக இருக்கிறதே, மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழையை எதிர்பார்ப்பதால் அந்நாட்டில் விமான சேவை முழு வீச்சில் நடைபெறாது என அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே கையாள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் வானிலை சூழ்நிலைகளை பொறுத்து இறுதி கட்ட மாற்றங்களை செய்வதற்கும் ஏற்பாடுகளை செய்து அதற்கான பணிகளை செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வழக்கமாக துபாய் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள இந்திய தூதரக தரப்பிலிருந்து துபாய்க்கு பயணிக்கும் இந்தியர்கள் தங்கள் விமானம் சரியான நேரத்திற்கு கிளம்புகிறதா என்பதை இறுதியாக விமான நிறுவனங்கள் உறுதி செய்த பின்பு தங்கள் பயணத்தை துவங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். இல்லை என்றால் தேவையில்லாமல் விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் திரும்பி செல்ல வேண்டிய தேவை இருக்கும் எனவும் கூறியுள்ளார்கள்.

அப்படியே அவர்கள் துபாய்க்கு செல்லும் விமானத்தில் டிக்கெட் கிடைத்த துபாய்க்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் துப்பாக்கி வரவும் எனவும், அத்தியாவசிய தேவை இல்லை என்றால் அடுத்த சில வாரங்கள் கழித்து பயணத்தை மாற்று திட்டமிட்டுக் கொள்ளவும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் துபாய் வந்த பின்பு அவர்கள் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் துபாயில் நின்று வேறு நாடுகளுக்கு செல்ல உள்ள விமானங்கள் எல்லாம் ரூட் மாற்றி விடப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் துபாய்க்கு செல்லாமல் வேறு நாட்டிற்கு சென்று அங்கிருந்து மீண்டும் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளன. அதனால் அந்த விமானங்களில் துபாய் செல்ல டிக்கெட் எடுத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக விமான டிக்கெட்டை முன்பே பதிவு செய்தவர்களுக்கு மாற்று தேதியில் அந்த டிக்கெட்டை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை விமானம் ரத்தனால் அந்த டிக்கெட்டையும் ரத்து செய்து அவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப அவர்களுக்கே செலுத்தும் ஆப்ஷனையும் விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாயில் தற்போது வானிலை சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் நம் நாட்டில் உள்ள மக்களே கடும் மழையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து துபாய் செல்ல திட்டமிட்டு இருக்கும் மக்கள் துபாய் செல்லாமல் தங்கள் பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்வது தான் நல்லது. சென்னை போன்ற பெரு வெள்ளத்தைப் பார்த்த நமக்கு அதன் அவஸ்தை புரியும் என்பதால் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது உத்தமம்.


Click it and Unblock the Notifications









