துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன.

விலையுயர்ந்த கார்கள் என்றால் அதில் ஒரு பிரத்யேக தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தீர்க்கமாக இருப்பதையும் காணலாம். அதுபோன்று துபாய் சாலைகளில் தினசரி காணக்கிடைக்கும் கார்கள் மற்றும் சாலைகளையும் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பாக இது அமைகிறது.

தரமான தங்கம்

தரமான தங்கம்

தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு உலகிலேயே சிறந்த நகரமாக துபாய் விளங்குகிறது. தரமான தங்க ஆபரணங்கள் வாங்குவதற்காக பலர் துபாய் செல்கின்றனர். அவ்வாறு தங்கத்திற்கு பெயர் போன ஊரில் ஒரு காரையே தங்கத்தால் இழைத்து ஜொலிக்க விட்டுள்ளனர்.

 தங்க பென்ஸ்

தங்க பென்ஸ்

காரின் வண்ணத்தை மாற்றுவதற்கும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் யோசிக்கும் வேளையில், தங்க முலாம் பூசப்பட்ட பென்ஸ் காரை ஆர்டர் செய்து வாங்கி அசரடிக்கின்றனர் துபாய் வாசிகள். இந்த பென்ஸ் கார் 24 காரட் தங்கத்தில் முலாம் பூசியுள்ளனர். மேலும், 156 சிறிய வைரக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 1.53 லட்சம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலர் ஓகேவா?

இந்த கலர் ஓகேவா?

வெள்ளை, சில்வர் வண்ணங்கள்தான் நமக்கு ஃபேவரிட். இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 29 சதவீதம் வெள்ளை நிறம் என்றும், 24 சதவீதம் சில்வர் நிறம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிற வண்ணங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தியர்கள் விரும்புவதில்லை. சிலர் மட்டுமே பிரத்யேக வண்ணங்களை தேர்வு செய்து வாங்குவது வழக்கம். ஆனால், அங்கு ஒருவரின் காரின் வண்ணத்தை பாருங்கள்.

 ஜிலு ஜிலு சிவப்பு

ஜிலு ஜிலு சிவப்பு

தனித்துவமாக தெரியும் விதத்தில் ஜிகினா தூவப்பட்டதுபோல் சிவப்பு நிறத்தில் பளபளக்கும் காரை பார்க்கலாம். அங்குள்ள அமெரிக்கன் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரினுடையதாம் இந்த கார்.

ஆல்ட்டோ ஆதிக்கம்

ஆல்ட்டோ ஆதிக்கம்

நம்மூர் பார்க்கிங் வளாகங்களில் ஆல்ட்டோவும், சான்ட்ரோவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அங்கு ஃபெராரியும், அஸ்டன் மார்ட்டினின் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அணிவகுப்பு

அணிவகுப்பு

துபாயை சேர்ந்த ஷேக் ஒருவர் தனது கார்களை அணிவகுக்க விட்டபோது எடுத்த படம். இங்கு பல கார் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இது சாத்தியம்.

 புது வண்ண புகாட்டி

புது வண்ண புகாட்டி

ஒரு நகரத்தில் ஒன்றிரண்டு புகாட்டி இருந்தால் பரவாயில்லை. எண்ணிக்கையில் அதிகம் இருக்கும்போது இது என்னுடையது என்று தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பெயிண்ட்டை மாற்றிவிடுகின்றனர். அது புகாட்டியாக இருந்தாலும், அதில் தங்களது தனித்துவத்தை பிரதிபலிக்கச் செய்கின்றனர்.

தங்க நிறம்

தங்க நிறம்

புகாட்டி காரை தங்க நிறத்தில் மாற்றியிருப்பதை காணலாம்.

செல்லப் பிராணி

செல்லப் பிராணி

நாய்க்குட்டிகளை செல்லப் பிராணியாக கார்களில் அழைத்துச் செல்வது சகஜம். ஆனால், அங்கு பாருங்கள் சிறுத்தையை சாவகாசமாக பக்கத்து சீட்டில் உட்கார வைத்து அழைத்துச் செல்கிறார் தில் ஷேக். இது பரவாயில்லை அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

சிங்கம்லே...

சிங்கம்லே...

இவர் கார் மீது சிங்கத்தை வைத்து விளையாடி வருகிறார். விலையுயர்ந்த கார்களும், சிங்கமும் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப் போனதை காணலாம்.

புலியும் விலக்கல்ல...

புலியும் விலக்கல்ல...

உலகிலேயே இந்த மாதிரி காட்சிகளை துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் மட்டும்தான் அதிகம் காண முடியும் என்று கூறலாம். புலிக்குட்டியை வேடிக்கை பார்க்கவிட்டு பிறருக்கு வேடிக்கை காட்டும் ஒரு துபாய் வாசி.

கைவிடப்பட்ட ஃபெராரி

கைவிடப்பட்ட ஃபெராரி

அம்பாசடரும், பத்மினியும் இங்கு கைவிடப்பட்ட நிலையில் காண முடியும். அங்கு லம்போர்கினி காரை சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளதை காணலாம். துபாய் போலீசாருக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் விஷயமாக இது மாறியிருக்கிறது. ஏனெனில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களது கார்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனராம்.

பிஎம்டபிள்யூ இசட்3

பிஎம்டபிள்யூ இசட்3

பழைய பிஎம்டபிள்யூ இசட்3 கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதை காணலாம். இது போன்ற கார்களை எடுத்துச் சென்று கார் ஜெயில் எனப்படும் பட்டியில் அடைத்துவைக்கின்றனர். கார் காணாமல் போனால், கார் ஜெயிலுக்கு சென்று பார்த்தால் அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கும்.

கார் சேகரிப்பு

கார் சேகரிப்பு

உலகின் அதிக கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்களை கணக்கில் எடுத்தால் அதில் துபாய் உள்ளிட்ட அமீரக நாடுகளின் ஷேக்குகள்தான் முன்னிலை வக்கின்றனர். 10 அல்லது 15 என்று நினைக்க வேண்டாம். நூற்றுக் கணக்கில் வைத்திருப்பதோடு, அதனை சிறப்பாக பராமரிக்கவும் செய்கின்றனர்.

போலீஸ் கார்கள்

போலீஸ் கார்கள்

மஹிந்திரா ஜீப்பிலிருந்து மெதுவாக ஹூண்டாய் ஆக்சென்ட் காருக்கு மாறினர். ஆனால், துபாய் போலீசார் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த கார்களின் பட்டியலை பார்த்து வளர்ந்த நாடுகளையே வாய் பிளக்க வைத்தது. உலகில் இருக்கும் விலையுயர்ந்த கார்களை பட்டியல்போட்டு, அத்தனையும் குறுகிய காலத்தில் வாங்கி சேர்த்துவிட்டனர் துபாய் போலீசார்.

காஸ்ட்லி கார்கள்

காஸ்ட்லி கார்கள்

துபாய் போலீசாரிடம் லம்போர்கினி, புகாட்டி வேரான், ஃபெராரி, அஸ்டன் மார்ட்டின், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ என உலகின் அனைத்து விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் ரோந்துப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கார்கள் மட்டுமல்ல, ஆம்புலன்ஸ் மற்றும் கடற்கரை ரோந்துக்காக விலையுயர்ந்த ஏடிவி வாகனம் மற்றும் படகுகளும் உள்ளன.

 சூப்பர் கார் டாக்சி

சூப்பர் கார் டாக்சி

அம்பாசடர் டாக்சியை பார்த்து அலுத்துப் போய் இப்போது சற்று பிரிமியம் கார்களை டாக்சியாகவும், சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டும் வசதிகளும் இப்போது கிடைக்கிறது. இந்த நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஆட்டோ ஷோவை பிரபலப்படுத்தும் நோக்கில் சூப்பர் கார்களை டாக்சியாக அறிமுகம் செய்துள்ளனர். அதுவும் இலவசமாக அந்த டாக்சியில் ரவுண்ட் போவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாலைகள்

சாலைகள்

இருக்கிற மரங்களை வெட்டி சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கிறோம். பாலைவன பூமி என்ற சுவடே தெரியாத அளவுக்கு அங்கு சாலையோரங்களில் பூங்காக்களை அமைத்து பசுமையாக வைத்து பராமரிக்கின்றனர்.

கார் நிறுவனங்களின் ஆர்வம்

கார் நிறுவனங்களின் ஆர்வம்

உலகின் எந்த நாட்டை சேர்ந்த விலையுயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், அது துபாய் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வடிவமைப்பு, வசதிகளில் முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தங்களது பிராண்டு மதிப்பை உயர்த்தும் விதமாக துபாய் மற்றும் அரபு நாடுகளில் பல பிரத்யேக அமைப்பிலான கட்டடங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.

ஃபெராரி வேர்ல்டு

ஃபெராரி வேர்ல்டு

அபுதாயில் உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை ஃபெராரி கார் நிறுவனம் அமைத்துள்ளது. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பக்கத்தில் இருக்கும் ஒரு படம் போதாதா என்ன?.

ரோல்ஸ்ராய்ஸ் அலுவலகம்

ரோல்ஸ்ராய்ஸ் அலுவலகம்

ஃபெராரி போன்றே அபுதாபியில் "பெளர்ணமியன்று பால் வண்ண நிலவுக்கு பதில் தங்க கீற்றுகளுடன் கருப்பு நிலா அடிவானில் இருந்து கிளம்பும்போது எப்படியிருக்கும்," என்ற கற்பனையை தூண்டுகிறது இரவு நேர விளக்கொளியில் மின்னும் ரோல்ஸ்ராய்ஸ் அபுதாபி தலைமையக கட்டிடம்..!!

முற்றும்.

 
Most Read Articles

Tamil
English summary
Taking a walk down the street, encountering a Ferrari made of gold, a man taking his pet cheetah for a ride in his car or just get a glimpse of the scrap yard, where Ferrari's are junked, one could feel a bit stressed. No worries, just call the ambulance service and you would get greeted by the first response team on a sports car! We are talking about the average everyday life in Dubai....
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more