ரூ.1.12 கோடி மதிப்பிலான டுகாட்டி சூப்பர்பைக் வாங்கிய இந்தியாவின் முதல் வாடிக்கையாளர்..!!
ரூ.1.12 கோடி மதிப்பிலான டுகாட்டி சூப்பர்பைக் வாங்கிய இந்தியாவின் முதல் வாடிக்கையாளர்..!!
உலகளவில் குறிப்பிட்ட அளவில் மட்டும் விற்பனை செய்யப்படும் டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 மாடல் பைக்கை ஒரே ஒரு இந்தியர் மட்டும் வாங்கியுள்ளார்.

டுகாட்டி நிறுவனம் தனது அதிக திறன் பெற்ற சூப்பர் பைக்கை சூப்பர்லெகரா என்ற பெயரில் தயாரித்துள்ளது. இந்தியாவில் ரூ.1.12 கோடி மதிப்புபெற்ற இந்த பைக்கை, ஓப்ராய் நட்சத்திர ஹோட்டல் குழுமத்தின் தலைவர் விக்ரம் ஓப்ராய் வாங்கியுள்ளார்.

விக்ரம் ஓப்ராயிடம் ஏற்கனவே டுகாட்டி நிறுவனத்தின் மற்ற 1299 பேனிகேல் எஸ், டுகாட்டி 916 மற்றும் 1098 போன்ற சூப்பர் பைக்குகள் உள்ளன. மேலும் சூப்பர் பைக்கின் மீது காதல் அதிகரிக்க இந்த புதிய மாடல் பைக்கை அவர் வாங்கியுள்ளார்.
சர்வதேச சந்தைக்கு என டுகாட்டி நிறுவனம் சூப்பர்லெகெரா 1299 மாடலில் வெறும் 500 பைக்குகளை மட்டுமே தயாரித்தது. இதன் அனைத்து பைக்குகளும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஓப்ராய் வாங்கியுள்ள டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 பைக் சுமார் 156 கிலோ எடை கொண்டது. வி-ட்வின் எஞ்சின் கொண்ட இந்த பைக் 215 பி.எச்.பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படும்.

இதுபோன்ற அதிக செயல்திறனை திறம்பட இயக்க பைக்கில் முழுமையான எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் உள்ளது.
டுகாட்டியின் இழுவை கட்டுபாட்டு கருவி (DTC EVO), டுகாட்டி ஸ்லைடு கட்டுபாட்டு (DSC) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

இது எல்லாவற்றையும் விட இந்த பைக்கை பாதுகாப்பாக ஸ்டார்ட் செய்து இயக்க டுகாட்டி பவர் லான்ச் என்ற வசதி உள்ளது. டுகாட்டி தயாரித்த மாடல்களில் இந்த அம்சத்தை பெற்றுள்ள முதல் பைக் சூப்பர்லெகெரா 1299 ஆகும்.

மேலும், இதில் டுகாட்டியின் சூப்பர் பைக்குகளில் இருந்த எஞ்சின் பிரேக் கண்ட்ரோல் வசதி இந்த மாடலிலும் அடங்கி இருக்கிறது.
ரைடரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு கட்டாயமாக்கிய ஏ.பி.எஸ் நிறுத்த அமைப்பும் டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 பைக்கில் உள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிக மதிப்பு கொண்டதாக கருதப்படும் இந்த பைக்கை, டுகாட்டி இந்தியாவின் தலைமை நிர்வாக ரவி அவலூர் உரிமையாளர் விக்ரம் ஓபராயிடம் ஒப்படைத்தார்.

உலகில் தலைசிறந்த சூப்பர் பைக்குகளில் ஒன்றான டுகாட்டி சூப்பர்லெகெரா 1299வை சொந்தமாக்கிக்கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக உரிமையாளர் விக்ரம் ஓப்ராய் தெரிவித்துள்ளார்.

உலகளவில் குறிப்பிட்ட 500 பைக்குகள் மட்டுமே இந்த மாடலில் டுகாட்டி தயாரித்துள்ளது. இதனால் இது ஆட்டோமொபைல் துறையின் பிரத்யேக மோட்டார் சைக்கிள் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்த மாடலின் வரவிற்கு பின்னர் சூப்பர் பைக்கிற்கான அர்த்தம் உலகளவில் மாறுபடும் என்றும், அதற்கான தயாரிப்பு பணி மற்றும் தொழில்நுட்ப முறைகள் வேறு ஒரு கட்டத்தை அடையும் என்ற கருத்துகளும் உருவாகியுள்ளது.

டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 பைக்கை உலகளவில் பலரும் வாங்க காத்திருந்தனர். இந்தியாவில் இதை முதன்முதலாக வாங்கிய விக்ரம் ஓப்ராய்க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்தியாவின் நிர்வாக தலைவர் ரவி அவவலூர் கூறினார்.


Click it and Unblock the Notifications








