சென்னை சாலைகளில் சுற்றிய 2 கோடி ரூபாய் கார்! உள்ளே இருந்தது அவரா! இந்த விஷயம் முன்னாடியே தெரியாம போச்சே!
உங்களுக்கு 369 கராஜ் (369 Garage) பற்றி தெரியுமா? சினிமா (Cinema) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) இந்த 2 துறைகளிலும் நீங்கள் அதிக ஆர்வம் கொண்டவர் என்றால், நிச்சயமாக உங்களுக்கு 369 கராஜ் பற்றி தெரிந்திருக்கும். ஏனெனில் இது மலையாள நடிகர் மம்முட்டி (Mammootty) மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) ஆகியோருடையது.
இந்த கராஜில் தற்போது புதிய கார் ஒன்று புதிதாக சேர்ந்துள்ளது. அது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740ஐ (BMW 7-Series 740i) கார் ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740ஐ காரின் விலை (Price) 1.78 கோடி ரூபாயாக உள்ளது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை தோராயமாக 2.25 கோடி ரூபாய் வரும். அதற்கு ஏற்ப 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகள் (Features) எல்லாம் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740ஐ காரில் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர இந்த காரின் பின் இருக்கைகளில் 5.5 இன்ச் டச்ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்கள் என ஏராளமான வசதிகளும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740ஐ காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லாத கார் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் (Mild Hybrid System) உடன் கூடிய இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.
இந்த சூழலில் புதிதாக வாங்கிய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 740ஐ காரை, துல்கர் சல்மான் ஓட்டி செல்லும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ சென்னை (Chennai) நகரில் எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான சென்னை சாலைகளில், துல்கர் சல்மான் லாவகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த கார் தமிழ்நாட்டில் (Tamil Nadu) பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பர் பிளேட்டில் TN மட்டுமல்லாது, 369 கராஜில் உள்ள மற்ற கார்களை போல், 369 என்ற பதிவு எண்ணையும் நம்மால் பார்க்க முடிகிறது. தந்தையும், மகனும் கார்களில் தனித்துவமான ரசனை கொண்டவர்கள் என்பதையே இது காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னை மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகர சாலைகளில் வலம் வரும் சொகுசு கார்களில், திரையுலக நட்சத்திரங்களும் இருக்கலாம் என்பதற்கு, சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆக பரவி வரும் இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை சாலையில் திரையுலக நட்சத்திரங்களை நீங்கள் பார்க்க நேரிட்டால், பார்ப்பதுடன் நிறுத்தி கொள்வது நல்லது.
அதை விடுத்து விட்டு அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயல்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இது அவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயமாக இருக்கலாம். பொதுமக்கள் கூட்டம் கூடி விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பொது இடங்களுக்கு வருவதில்லை. ஆனால் துல்கர் சல்மான் சர்வ சாதாரணமாக கார் ஓட்டி வந்திருப்பது பெரிய விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








